நடிகர் சூர்யா திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில், இயக்குனர் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா, பிதாமகன் ஆகிய படங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
காதல், ரொமான்ஸ் என ரொமான்டிக் பாய்யாகவே பார்க்கப்பட்ட சூர்யாவால் இப்படியும் நடிக்க முடியும் என, அவரது நடிப்பு திறமையை ரசிகர்கள் முன் கொண்டு வந்து நிறுத்திய பெருமை பாலாவையே சேரும்.
இந்த இரு படங்களுக்கு பின், கடந்த 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'மாயாவி' படத்தை பாலா தயாரித்திருந்தார். ஆனால் கடந்த 20 வருடங்களாக சூர்யா மற்றும் பாலா கூட்டணி இணையவே இல்லை.
இந்நிலையில் பாலா இயக்கத்தில் மீண்டும் சூர்யா இணைய உள்ள படம் குறித்த தகவல் சமீபத்தில் அதிகார பூர்வமாக வெளியானது.
'ஜெய்பீம்' திரைப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கும் இந்த படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத ஒரு சூப்பர் தகவல் இந்த படம் குறித்து வெளியாகியுள்ளது. ஏற்கனவே பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், 7 ஆம் அறிவு, மாற்றான் என தொடர்ந்து 7 முறை இரட்டை மற்றும் அதற்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்த சூர்யா மீண்டும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் வேறு நடிகரை தான் நடிக்க வைக்க முதலில் திட்டமிட்ட பாலா, அந்த கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாலும், சில நிமிடங்களே அந்த கதாபாத்திரத்தின் காட்சிகள் வரும் என்பதாலும், சூர்யாவையே நடிக்க வைக்க முடிவெடுத்து விட்டாராம். இந்த தகவல் சூர்யா ரசிகர்களை செம்ம குஷியாகியுள்ளது.