dushara vijayan
இயக்குனர் பா.ரஞ்சித், வழக்கமான தன்னுடைய பாணியில் இருந்து விலகி சற்று வித்தியாசமாக இயக்கி இருந்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. 1970 களில், வடசென்னையில் சில பரம்பரைகளால், விளையாடப்படும் பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுத்திருந்தார்.
dushara vijayan
இது ஒரு பீயட் ஃபிலிம் என்பதற்கு ஏற்ப கலை இயக்குனரின் கைவண்ணம் தத்ரூபமாக இருந்தது. இவை அனைத்திற்கும் கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக அனைத்து கதாபாத்திரங்களும், தங்களுடைய நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தனர்.
dushara vijayan
படம் முடிந்த பின்பும் கூட ரசிகர்கள்... அந்த கதாபாத்திரங்களை மறக்க முடியாத அளவுக்கு இயல்பாக நடிப்பை வெளிப்படுத்திய அனைவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலமாக தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு புறம் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேட்டி கொடுப்பதில் படு பிசியாக உள்ளார்.
dushara vijayan
அந்த வகையில் கபிலனின் மனைவி மாரியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்திருந்த, 'துஷாரா விஜயன்' தற்போது இந்த பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்றும், இத கதாபாத்திரத்தில் இருந்து தன்னால் மீண்டு வர முடியவில்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
dushara vijayan
பா.ரஞ்சித்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தேர்வும் அருமை என ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் கூறி வரும் நிலையில், துஷ்ரா விஜயன், டாடி, ரங்கன், கபிலன், வேம்புலி போன்ற கதாபாத்திரங்கள் இவர்களை தவிர யார் நடித்தாலும், இந்த அளவுக்கு வந்திருக்காது என்பதையும் நம்ப வைத்து விட்டார்.
dushara vijayan
அதற்க்கு ஏற்ற போல் அந்ததந்த கதாபாத்திரமாகவே அவர்கள் வாழ்த்து நடித்திருந்தனர். சமீபத்திய பேட்டி ஒன்றில், இது குறித்து நடிகை துஷாரா விஜயன் கூறியுள்ளதாவது... பா. ரஞ்சித் சாருக்கு என் அன்பான நன்றி. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு சிறந்த கதாபாத்திரத்திற்காகத்தான் இத்தனை வருடம் காத்திருந்தேன். இந்த திரைப்படத்தின் மூலம் அது நனவாகியுள்ளது.
dushara vijayan
ரஞ்சித் சார் அலுவலகத்தில் இருந்து என்னை அழைத்த போது, யாரோ நண்பர்கள் சிலர் பிராங்க் செய்கிறார்கள் என நான் அந்த கால்களை மதிக்கவே இல்லை. 17 முறை அந்த நம்பரில் இருந்து அழைப்பு வந்த போது தான் ஓரளவு நம்பிக்கை வந்தது. பின்னர் ரஞ்சித் சார் ஆபீஸ் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என தெரிவித்துள்ளார். பின்னர் பா.ரஞ்சித் மாரியம்மாள் கதாபாத்திரம் குறித்து என்னிடம் விவரித்தார். ஒரு காட்சியை அங்கேயே நடித்தும் கட்ட சொன்னார், எனினும் தனக்கு கொடுத்த இந்த கதாபாத்திரத்தை சரியான செய்து விடுவேனோ என்கிற பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.
dushara vijayan
போட்டோ ஷூட்டில் என்னை மாரியம்மாள்ளாகவே மாதிரியதோடு மட்டும் இன்றி ஷூட்டிங்கில் அந்த கதாபாத்திரமாகவே வாழ செய்து விட்டார். அனைவரது வாழ்த்தும், பாராட்டுகளும் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.