1200 மில்லியனைக் கடந்து சாதனை படைத்த ‘ரவுடி பேபி’... உச்சகட்ட மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்...!

Published : Jul 31, 2021, 07:30 PM IST

கடந்த மார்ச் மாதத்தில் 1100 மில்லியன் வியூஸ்களைப் பெற்ற ரவுடி பேபி பாடல், தற்போது 12000 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 

PREV
13
1200 மில்லியனைக் கடந்து சாதனை படைத்த ‘ரவுடி  பேபி’... உச்சகட்ட மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்...!


பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் "மாரி 2". இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான "ரவுடி பேபி" பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.  
 

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான படம் "மாரி 2". இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான "ரவுடி பேபி" பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. படம் பெரிய அளவில் ஹிட்டாகவிட்டாலும், ‘ரவுடி பேபி’ பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்களை கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
 

23

இந்நிலையில் இந்த பாடல் மூலமாக யூ-டியூப் நிறுவனத்திடம் இருந்து தனுஷிக்கு 8 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த பாடலில் பணியாற்றி கலைஞர்களுக்கு விருந்து வைக்க தனுஷ் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

நடனப்புயல் பிரபு தேவா நடன பயிற்சியில் தனுஷ், சாய் பல்லவி போட்ட துள்ளல் ஆட்டம் பட்டி, தொட்டி முதல் அனைவரையும் ஈர்த்தது. இசை, நடனம், செட் அமைப்பு என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலை யூ-டியூப் மூலமாக இதுவரை மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதன் மூலம் இந்த பாடல் தென்னிந்திய மொழிகளிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற ஒரே பாடல் என்ற சாதனையையும் படைத்தது. 

33

அனிரூத் இசையில் "மாரி" படத்தின் பாடல்கள் செம்ம ஹிட்டான நிலையில், இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. முதல் பாகம் அளவுக்கு 2ம் பாகத்தின் பாடல்கள் இருக்குமா? என ரசிகர்கள் புலம்பி வந்த சமயத்தில் "ரவுடி பேபி" என்ற ஒரே ஒரு பாடல் "மாரி 2" படத்திற்கான ஒட்டுமொத்த புரோமோஷனாக மாறியது. 

இந்த பாடல் யூ-டியூப்பில் வெளியாகி இரண்டரை ஆண்டுகளை கடந்த போதும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 1100 மில்லியன் வியூஸ்களைப் பெற்ற ரவுடி பேபி பாடல், தற்போது 12000 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் தினமும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பாடலை யூ-டியூப்பில் கண்டு ரசித்து, இப்படியொரு சாதனை படைக்கவைத்துள்ளனர். 

click me!

Recommended Stories