தீபாவளி பண்டிகைக்கு புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம், அந்த வகையில் 2025-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசும், புதுப் படமும் தான். வழக்கமாக தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களின் படங்கள் ஏதாவது ஒன்று ரிலீஸ் ஆகிவிடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய ஹீரோக்கள் தீபாவளி ரேஸில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த ஆண்டு இரண்டாம் நிலை ஹீரோக்கள் கூட தீபாவளி ரேஸில் இடம்பெறாதது ஆச்சர்யமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன், துருவ் விக்ரம், ஹரிஷ் கல்யாண் என இளம் ஹீரோக்கள் மட்டுமே களம் காணுகின்றனர். அதைப்பற்றி பார்க்கலாம்.
26
டியூட்
தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படமும் உள்ளது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் மமிதா பைஜு, பரிதாபங்கள் டிராவிட், சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் மூலம் சாய் அபயங்கரும் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
36
பைசன் காளமாடன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள பைசன் காளமாடன் திரைப்படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து உள்ளார். இப்படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரனாக நடித்துள்ளார். ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படமும் அக்டோபர் 17ந் தேதி திரைக்கு வருகிறது.
ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி உள்ள படம் டீசல். இப்படமும் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஷண்முகம் முத்துச்சாமி இயக்கி உள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தை தேர்டு ஐ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு ரிச்சர்டு எம் நாதன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இப்படமும் அக்டோபர் 17ந் தேதியன்று ரிலீஸ் ஆகிறது.
56
கார்மேனி செல்வம்
சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கார்மேனி செல்வம். இப்படத்தை ராம் சக்ரி இயக்கி உள்ளார். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ளார். பணத்தின் மீது ஏற்படும் ஆசை ஒருவரின் வாழ்க்கையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம். இப்படமும் அக்டோபர் 17 அன்று திரை காண உள்ளது.
66
கம்பி கட்ன கதை
நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடித்துள்ள படம் கம்பி கட்ன கதை. இப்படத்தை ராஜநாதன் பெரியசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் மனோபாலா, சிங்கம்புலி, சீனிவாசன், முத்துராமன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சதுரங்க வேட்டை பாணியில் உருவாகி இருக்கும் இப்படம் அக்டோபர் 17ந் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது.