பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து தீபாவளி விருந்தாக திரைக்கு வந்திருந்த டியூட் திரைப்படத்தின் லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் டியூட். கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்கி இருந்தார். இவர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். டியூட் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ரோகிணி, டிராவிட் செல்வம், கருடா ராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். அவரின் இசையில் உருவான ஊறும் பிளெட் என்கிற பாடல், பட ரிலீசுக்கு முன்பே வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது.
24
டியூட் சாதனை
டியூட் திரைப்படம் தான் தீபாவளி ரிலீஸ் படங்களில் அதிக வசூல் செய்த படமாகும். இப்படம் ரிலீஸ் ஆன ஆறே நாட்களில் 100 கோடி வசூல் அள்ளி சாதனை படைத்தது. பிரதீப் கெரியரில் அதிவேகமாக 100 கோடி வசூல் அள்ளிய படம் டியூட் தான். இதற்கு முன்னர் அவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் ரிலீஸ் ஆன 35 நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்தது. அடுத்ததாக இந்த ஆண்டு திரைக்கு வந்த டிராகன் திரைப்படம் 10 நாளில் 100 கோடி வசூல் அள்ளி சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை டியூட் திரைப்படம் முறியடித்துள்ளது.
34
டியூட் படத்தின் வசூல்
பிரதீப் ரங்கநாதன் இதுவரை ஹீரோவாக நடித்த படங்கள் மூன்று தான். அந்த மூன்று திரைப்படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கின்றன. இப்படி ஒரு சாதனையை இந்திய சினிமாவில் வேறு எந்த ஹீரோவும் படைத்ததில்லை. 'டியூட்' திரைப்படம் உலகளவில் சுமார் 114.12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் 85.87 கோடி வசூல் அள்ளிய இப்படம், வெளிநாடுகளில் இருந்து மட்டும் 28.25 கோடியை பெற்றுள்ளது. இருப்பினும் இப்படத்தால் டிராகன் பட சாதனையை முறியடிக்க முடியவில்லை. அப்படம் 151 கோடி வசூலித்து, பிரதீப் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக இருக்கிறது.
இந்நிலையில், 'டியூட்' படத்தின் OTT வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ர4ந் தேதி அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டியூட் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டியூட் படம் தியேட்டரில் வெளியானபோதே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்ததால், ஓடிடி வெளியீட்டுக்கு பின்னர் மேலும் சில சர்ச்சைகளில் சிக்க வாய்ப்பு உள்ளது. இப்படம் ஓடிடியில் எந்த அளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.