ஜனவரி 23ந் தேதி தியேட்டர் மற்றும் OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா? ஃபுல் லிஸ்ட் இதோ

Published : Jan 19, 2026, 12:21 PM IST

பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் வேட்டு வைக்க, வருகிற ஜனவரி 23-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் டஜன் கணக்கிலான படங்கள் திரைக்கு வர உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
தியேட்டர் ரிலீஸ் படங்கள்

ஜனவரி 23-ந் தேதி மோகன் ஜி இயக்கியுள்ள திரெளபதி 2 திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்துள்ளார். இப்படத்துக்கு போட்டியாக ஹாட்ஸ்பாட் 2 மச் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்‌ஷன், பிரிகிடா, பவானி ஸ்ரீ என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதுதவிர மாயபிம்பம் என்கிற சிறுபட்ஜெட் படமும் திரைக்கு வருகிறது. மேலும் நிவின் பாலி நடித்த பேபி கேர்ள், ஹாலிவுட் படமான மெர்சி ஆகியவையும் இந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆகின்றன.

25
ஜீ5 ஓடிடி வெளியீடுகள்

சிறை (Sirai) - க்ரைம் டிராமா

சிறையிலிருந்து நீதிமன்றம் வரை பயணிக்கும் ஒரு கைதியின் கதை மூலம், மதப் பாகுபாடு மற்றும் நீதித்துறை குறைபாடுகள் வலுவாகக் காட்டப்படுகின்றன. இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஜனவரி 23ந் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

45

ஒரு மென்பொருள் பொறியாளர் விபத்தால் 45 நாட்கள் மட்டுமே வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். எமனின் பிரதிநிதியான ராயப்பா கொடுத்த இந்த கெடு, கர்மா-மனவருத்தம்-மரணம் இடையே ஒரு மனப் போராட்டமாக மாறுகிறது. இப்படம் ஜீ5 ஓடிடியில் ஜனவரி 23ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

காலி போட்கா (Kaalipotka)

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நான்கு பெண்கள் எதிர்பாராதவிதமாக ஒரு குற்றத்தில் சிக்கி, ஊழல் அமைப்பை எதிர்கொள்கிறார்கள். பெண் சக்தி, நீதி, எதிர்ப்பு ஆகியவை முக்கிய கரு. இது ஜனவரி 23ந் தேதி முதல் ஜீ5 ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

மஸ்தி 4 (அடல்ட் காமெடி)

ரித்தேஷ்-விவேக்-அஃப்தாப் கூட்டணி மீண்டும் குழப்பத்தில் சிக்கி, திருமண வாழ்க்கையை நகைச்சுவையாக கேள்விக்குள்ளாக்குகிறது. ஜீ5 ஓடிடியில் ஜனவரி 23 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.

35
நெட்பிளிக்ஸில் ரிலீஸ் என்னென்ன?

தேரே இஷ்க் மே (ரொமாண்டிக் ஆக்‌ஷன் டிராமா)

காதல், மனக் கட்டுப்பாடு மற்றும் தேசபக்திக்கு இடையே நடக்கும் சிக்கலான உறவுக் கதை. தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் நடித்த இப்படம் ஜனவரி 23ந் தேதி முதல் நெட்பிளிக்ஸுக்கு வருகிறது.

A Big Bold Beautiful Journey (ரொமாண்டிக் ஃபேண்டஸி)

திருமணத்திற்குப் பிறகு தொடங்கும் ஒரு மாயாஜால பயணத்தில், இரண்டு அந்நியர்கள் தங்கள் கடந்த காலத்தை எதிர்கொள்கிறார்கள். இது நெட்பிளிக்ஸில் ஜனவரி 20 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.

Queer Eye – சீசன் 10

வாஷிங்டன் டி.சி. பின்னணியில் இறுதி சீசன். சுய ஏற்பு மற்றும் சமூக மாற்றம் குறித்த இதயத்தைத் தொடும் பயணம். இந்த வெப் தொடர் ஜனவரி 21 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

45
ஜியோ ஹாட்ஸ்டாரில் என்ன ஸ்பெஷல்?

மார்க் (ஆக்‌ஷன் த்ரில்லர்)

குழந்தைகள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஒரு கடுமையான போலீஸ் அதிகாரியின் போராட்டம். கிச்சா சுதீப் நடித்த இப்படம் ஜனவரி 23ந் தேதி முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

A Knight of the Seven Kingdoms (ஃபேண்டஸி தொடர்)

Game of Thrones-க்கு முந்தைய காலத்தில், சர் டங்கன் மற்றும் எக் ஆகியோரின் பயணம் எப்படி இருந்தது என்பதே இந்தக் கதை. JioHotstar ஓடிடியில் ஜனவரி 19 ந் தேதி வெளியாகிறது.

குஸ்தாக் இஷ்க் (ரொமான்ஸ்)

ஒரு இளைஞன், ஒரு கவிஞர் மற்றும் அவரது மகளுக்கு இடையே நடக்கும் தார்மீகப் போராட்டம். இப்படம் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஜனவரி 23 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

ஹிம் (ஸ்போர்ட்ஸ் சைக்கலாஜிக்கல் ஹாரர்)

கால்பந்தில் “GOAT” ஆக வேண்டும் என்ற வெறி எவ்வளவு பயங்கரமாக மாறும் என்பதைக் காட்டும் கதை. JioHotstar ஓடிடியில் ஜனவரி 19ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஸ்பேஸ் ஜென்: சந்திரயான் (டிராமா தொடர்)

சந்திரயான்-3 வெற்றியின் பின்னால் உள்ள விஞ்ஞானிகளின் மனிதநேயக் கதை. இந்த வெப் தொடர் ஜனவரி 23ந் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

55
அமேசான் பிரைம் ஓடிடி வெளியீடுகள்

சீக்கட்டிலோ (தெலுங்கு க்ரைம் த்ரில்லர்)

ஒரு ட்ரூ க்ரைம் பாட்காஸ்டர், தொடர் கொலையாளியைத் தேடி ஹைதராபாத் நிழல் உலகிற்குள் செல்கிறார். அகினேனி மருமகள் சோபிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜனவரி 23 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

It’s Not Like That (குடும்ப டிராமா தொடர்)

ஒரு பாஸ்டர் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு இடையே ஒரு புதிய தொடக்கத்தின் கதை. இந்த வெப் தொடர் Prime Video-வில் ஜனவரி 25 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.

ஸ்டீல் (ஹை-ஆக்டேன் த்ரில்லர்)

லண்டனில் நடந்த ஒரு நிதி மோசடிக்குப் பின்னால் உள்ள சதித்திட்டங்களை மையமாகக் கொண்ட கதை. இதனை ஜனவரி 21 முதல் அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories