விமான நிலைய இமிக்ரேசன் கவுண்டரில் ஒரு சுவாரஸ்யமான, முறைசாரா உரையாடலை நடத்தியதாகக் கூறும் பாகிஸ்தான் நடிகையின் வீடியோ சமூக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது. இந்த வீடியோ ஆன்லைனில் வெளியானவுடன், பணியில் இருக்கும்போது இதுபோன்ற பேச்சுக்கள் இமிக்ரேசனில்க் அனுமதிக்கப்படுமா? என நெட்டிசன்களிடையே விவாதம் வெடித்தது.
இந்த வைரல் வீடியோவில், நடிகை என்று கூறிக் கொள்ளும் நாசியா சனம் என்ற பாகிஸ்தானிய பெண், விமான நிலையத்தில் உள்ள இமிக்ரேசன் கவுண்டருக்கு வந்தபோது, அங்குள்ள அதிகாரி தன்னிடம் லேசான, காதல் கொண்ட முறையில் பேசியதாகக் கூறினார். அந்தப் பெண், தான் கராச்சியைச் சேர்ந்தவள் என்பதை அதிகாரி அறிந்ததும், உருது மொழியில் பேசத் தொடங்கினார்.
அந்த அதிகாரி தனது உடையைக் கவனித்த பிறகு, தான் ஒரு கேபின் குழு உறுப்பினரா என்று கேட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார். அவர் அதை மறுத்தபோது, அந்த அதிகாரி நகைச்சுவையாக, "நீ உன் வேலையைச் சொல்லும் வரை உன்னை இங்கே காத்திருக்கச் செய்வேன்" என்றார். அந்த அதிகாரி தன்னிடம், "நீ ஏதோ ஒரு ஸ்பெஷல்" என்று சொன்னதாக அந்தப் பெண் கூறுகிறார்.