லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் டிராகன். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வர உள்ளது.
24
தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
டிரகான் படத்துக்கு போட்டியாக தனுஷின் நிலவுக்கு என்மேன் என்னடி கோபம் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை தனுஷ் இயக்கி இருக்கிறார். இதில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இதில் அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தை தனுஷ் தான் தயாரித்தும் உள்ளார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.
டிராகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களின் டிரைலர் வெளியான பின்னர் அந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் டிராகன் படத்திற்கு சற்று கூடுதலாகவே எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் டிரைலர் பார்த்ததும் டான் படம் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. அதன்பின்னர் அது டான் படத்தின் கதை இல்லை என இயக்குனர் அஸ்வத் விளக்கம் அளித்திருந்தார்.
44
முன்பதிவு வசூல் நிலவரம்
டிராகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களுக்கு முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் படத்தை விட பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு தான் முன்பதிவில் அதிக வசூல் கிடைத்துள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் தற்போது வரை முன்பதிவு மூலம் ரூ.50 லட்சத்து 76 ஆயிரம் வசூலித்து உள்ளது. ஆனால் டிராகன் படம் அதைவிட டபுள் மடங்கு வசூலித்து இருக்கிறது. அதன்படி டிராகன் படம் முன்பதிவு மூலம் ரூ.1 கோடியே 6 லட்சத்து 88 ஆயிரம் வசூலித்து இருக்கிறது. இதன்மூலம் டிராகன் படத்திற்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.