தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகை பிரியங்கா அருள் மோகன். டாக்டர் படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனின் டான், தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரவி மோகன் உடன் இணைந்து 'பிரதர்' படத்தில் நடித்தார். ஆனால், இந்தப் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை.
24
கோல்டன் ஸ்பேரோவ்:
தற்போது தனுஷ் இயக்கத்தில் 21ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் கோல்டன் ஸ்பேரோவ் (Golden Sparrow) என்ற பாடலுக்கு மட்டும் வந்து சென்றுள்ளார். இதே போன்று தெலுங்கு சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிக்கும் ஓஜி (OG - Ojas) என்ற படத்தில் நடித்துள்ளார். ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாக இருந்த நிலையில் தயாரிப்பு பணிகளின் தாமதம் காரணமாக அறிவிக்கப்படி வெளியாகவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
தெலுங்கு சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஓஜி படமும் ஒன்று. இந்தப் படத்தில் அவர் நடிக்கவே தெலுங்கு சினிமாவில் டாக் ஆஃப் தி இண்டஸ்ட்ரியாக இருக்கிறார். இந்த நிலையில் தான் ஹைதராபாத்தில் ஒரு ஷோரூம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். நேற்று, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சாலையில் உள்ள ஜிடி வீவ்ஸ் நிறுவனத்தின் பட்டுப்புடவை ஷோரூம் ஒன்றை நடிகை பிரியங்கா அருள் மோகன் திறந்து வைத்தார். ஜிடி நிர்வாக இயக்குநர்கள் சௌஜன்யா, பாபி திக்கா, டி. ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன் இணைந்து அவர் அந்த கடையை திறந்து வைத்தார்.
44
'புடவைகள் இந்திய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதி:
அப்போது பேசிய பிரியங்கா அருள் மோகன் கூறியிருப்பதாவது 'புடவைகள் இந்திய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதி. அவை பாரம்பரியத்தையும் கம்பீரத்தையும் குறிக்கின்றன. இந்த கலெக்ஷன்களை எல்லாம் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. புடவைகள் மீதான அவர்களின் ஃபேஷன் விலைமதிப்பற்றது. ஜிடி வீவ்ஸில் இருக்கும்போது புடவைகளின் உலகில் இருப்பது போல் இருக்கிறது. கலை, வடிவமைப்புகள் மிகவும் அழகாக இருக்கின்றன. என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. சிறந்த புடவை பிராண்டுகள் வளமான பாரம்பரியம், சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் புடவை பிரியர்களின் மாறுபட்ட ரசனைகளுக்கு ஏற்ப உயர்தர புடவைகளை வழங்குகின்றன. ஜிடி வீவ்ஸ் என்பது டிசைனர் புடவைகளுக்கு சிறந்த தேர்வு' என்று பிரியங்கா அருள் மோகன் தெரிவித்தார்.