டிராகன் படத்தால் பாக்ஸ் ஆபிஸில் கப் சிப்னு ஆன சப்தம் - 2 நாளில் இவ்வளவு தான் வசூலா?

Published : Mar 02, 2025, 08:41 AM IST

ஆதி நடிப்பில் வெளியான சப்தம் படத்தைக் காட்டிலும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது.

PREV
15
டிராகன் படத்தால் பாக்ஸ் ஆபிஸில் கப் சிப்னு ஆன சப்தம் - 2 நாளில் இவ்வளவு தான் வசூலா?

பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் ஒரு வாரத்தை கடந்து வெற்றி நடைபோட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக கடந்த வெள்ளி அன்று ரிலீஸ் ஆன ஆதியின் சப்தம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

25
Dragon

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த படம் டிராகன். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக அனுபமா மற்றும் கயாடு லோகர் நடித்திருந்தார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருந்தார். இளைஞர்களை கவரும் விதமாக அமைந்திருந்த இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே சக்கைப்போடு போட்டு வருகிறது. ஒரு வாரத்தை கடந்து வெற்றிநடை போட்டு வரும் டிராகன் திரைப்படம் வசூலில் ரூ.100 கோடியை நெருங்கி வருகிறது.

35
Dragon Box Office

அதன்படி 9 நாட்களில் 95 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. அதிலும் நேற்று மட்டும் இப்படம் ரூ.7.25 கோடி வசூலித்து இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5.75 கோடி வசூலித்துள்ள இப்படம் தெலுங்கில் ரூ.1.5 கோடி வசூலித்து இருக்கிறது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் டிராகன் படத்தின் வசூல் நேற்றை விட கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் இன்று ரூ.100 கோடி என்கிற இமாலய வசூலை டிராகன் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்.... பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தால் விக்னேஷ் சிவனுக்கு அடித்த ஜாக்பாட்!

45
sabdham

டிராகன் படத்துக்கு போட்டியாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆதி, லட்சுமிமேனன் நடித்த சப்தம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை அறிவழகன் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். திகில் படமான இது தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகி இருந்தது. சப்தத்தை வைத்து பயமூட்டி ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை இப்படம் கொடுத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் டிராகன் படத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

55
sabdham Box Office

அதன்படி முதல் நாளில் ரூ.1 கோடி வசூலித்திருந்த இப்படம் தமிழில் வெறும் 30 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது. அதே வேளையில் இதன் தெலுங்கு வெர்ஷன் ரூ.70 லட்சம் கலெக்‌ஷன் செய்திருந்தது. ஆனால் இரண்டாம் நாளில் இதன் வசூலில் பெரியளவில் முன்னேற்றம் இல்லை. நேற்று தமிழில் ரூ.50 லட்சமும் தெலுங்கில் ரூ.1 கோடியும் வசூலித்து மொத்தமாக ரூ.1.5 கோடி வசூலித்து இருக்கிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் அப்படம் வசூலில் பிக் அப் ஆக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்.... Sabdham : சவுண்டை வைத்து பயம் காட்டினார்களா? பல்பு வாங்கினார்களா? சப்தம் விமர்சனம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories