கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘டோரதி’ திரைப்படம் முதல் நாளில் வெறும் ரூ.69 லட்சம் மட்டுமே வசூலித்து பெரும் சறுக்கலைச் சந்தித்துள்ளது.
சர்ச்சையில் சிக்கிய ‘டோரதி’: முதல் நாள் வசூலில் சறுக்கல்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்.25 அன்று வெளியான திரைப்படம் ‘டோரதி’. சனந்த், ‘மொதராத்திரி’ புகழ் ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியும், படம் முதல் நாளிலேயே ரசிகர்களிடையே கடும் விவாதத்தையும் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது.
25
முன்கூட்டியே கிளம்பிய சர்ச்சை
படம் ரிலீஸாவதற்கு முன்பே இளையராஜாவின் பேட்டி மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் இருந்து கசிந்த தகவல்களை வைத்து படத்தின் மையக்கரு என்ன என்பதை நெட்டிசன்கள் கணித்திருந்தனர். படம் அதே கதையாக இருந்தால் அவ்வளவுதான் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், தியேட்டரில் படம் வெளியானதும் நெட்டிசன்கள் படத்தை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, 3-ம் பாலினத்தவருக்கான அங்கீகாரம் என்பதைத் தாண்டி, இன்னும் 10 ஆண்டுகளில் அவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள் என்று படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட வசனம்தான் சமூக வலைதளங்களில் படம் இந்த அளவுக்குக் கடுமையான எதிர்வினைகளைச் சந்திக்க முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
35
பாக்ஸ் ஆபீஸில் பேரதிர்ச்சி: ரூ.1 கோடி கூட எட்டவில்லை!
பாலின பாகுபாடு இருக்கக் கூடாது என்ற கருத்தை முன்வைத்து வெளியான இப்படத்திற்கு திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இளையராஜாவின் இசை, கார்த்திக் சுப்புராஜின் பிரம்மாண்டம் என மிகப்பெரிய புரமோஷன்கள் இருந்தபோதிலும், முதல் நாளில் இப்படம் வெறும் ரூ.69 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு ரூ.1 கோடி கூட வசூலாகாதது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் கணிசமாக உயர்ந்தால் மட்டுமே படம் தப்பிக்க வாய்ப்புள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சில விவகாரங்களை இயல்பாக்க (Normalize) முயற்சிப்பது முற்றிலும் தவறு என்றும், வழக்கம்போல தனது சொந்தக் கருத்துக்களைத் திணித்து ஒட்டுமொத்தப் படத்தையுமே கெடுத்துவிட்டார் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
இணையத்தில் பரவி வரும் இந்த தீவிர எதிர்மறைப் பிரச்சாரத்தின் காரணமாகவே, முதல் காட்சி முடிந்த பிறகு திரையரங்குகளுக்கு மக்கள் வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
55
தவறான விளம்பர உத்தி (Misleading Promotion)?
படத்தின் பிரதான மையப்புள்ளியே கீர்த்தி சுரேஷ் தான் என்பது போல புரமோஷன்களில் காட்டியதே மிகப்பெரிய பின்னடைவு எனப் பேசப்படுகிறது. டீசர், டிரெய்லர் என எதிலுமே படத்தின் உண்மையான மையக்கருவை வெளிப்படுத்தாமல் ஆடியன்ஸை ஏமாற்றிவிட்டதாகவும், ரசிகர்களை முன்கூட்டியே தயார்படுத்தாமல் மறைத்து வைத்த விளம்பர உத்தியே தற்போது படத்திற்கே பெரும் சுமையாக மாறிவிட்டதா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.