'டாக்டர்' ரிலீஸ் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர்..!

First Published May 12, 2021, 5:12 PM IST

ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால், தற்போது படம் வெளியாவது சாத்தியம் இல்லை. மேலும் இரண்டு வாரங்களுக்கு கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக, முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து இந்த படம் குறித்து அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்காக தயாரிப்பாளர் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
 

'கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது.
undefined
ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் வெளியாகி யூ-டியூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்தது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு so baby பாடல் வெளியாகி 16 மில்லியன் வியூஸ்களை குவித்து லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
'டாக்டர்' ஏற்கனவே மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் டாக்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் வர இருப்பதால் பட வெளியீட்டை தள்ளிவைக்கிறோம். என்றும் பட வியாபாரம், தேர்தல், ரசிகர்களை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறிய படக்குழுவினர். பின்னர் மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவித்தனர்.
undefined
ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால், தற்போது படம் வெளியாவது சாத்தியம் இல்லை. மேலும் இரண்டு வாரங்களுக்கு கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக, முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து இந்த படம் குறித்து அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்காக தயாரிப்பாளர் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
undefined
இதுகுறித்து தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது, 'டாக்டர்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர். நானும் ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தை சரியான தேதியில் ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றேன்.
undefined
ஆனால் அதே நேரத்தில் நமது திரையுலக சொந்தங்கள் கொரோனாவால் உயிர் இழந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து சிந்திக்கவே என்னால் முடியவில்லை. முதலில் நமது நாடு கொரோனாவில் இருந்து மீளட்டும், அதன் பிறகு 'டாக்டர்' ரிலீஸ் குறித்து யோசிக்கலாம். அதுவரை தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக குடும்பத்துடன் வீட்டிலேயே இருங்கள்’ என்று கூறியுள்ளார்.
undefined
click me!