ரவி கிருஷ்ணா இல்ல... 7ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகரா?

First Published | Aug 16, 2024, 11:16 AM IST

செல்வராகவன் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான 7ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடிக்க இருந்த மாஸ் நடிகர் பற்றி பார்க்கலாம்.

Selvaraghavan

செல்வராகவன் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்களுள் ஒன்று 7 ஜி ரெயின்போ காலனி. இப்படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார். அவர் அறிமுகமான படமும் இதுதான். அவருக்கு ஜோடியாக செல்வரகவனின் முன்னாள் மனைவி சோனியா அகர்வால் நடித்திருந்த இப்படம் கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது யுவன் சங்கர் ராஜாவின் இசை. அவர் இசையில் வெளிவந்த அப்படத்தின் பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.

7g Rainbow colony

7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது ரவி கிருஷ்ணா இல்லையாம். இந்தக் கதையை எழுதி முடித்ததும் செல்வராகவன் முதன்முதலில் தேர்வு செய்த ஹீரோ சூர்யா தானாம். ஆனால் அவர் அந்த சமயத்தில் பிதாமகன், காக்க காக்க என இரண்டு படங்களில் பிசியாக நடித்து வந்ததால், கால்ஷீட் கிடைக்கவில்லையாம். இதனால் சூர்யாவை தொடர்ந்து மாதவனிடம் இந்த கதையை கொண்டுசென்று இருக்கிறார் செல்வராகவன்.

இதையும் படியுங்கள்... தமிழ் பெண்ணுடன் காதல் திருமணம்... நடிகர் மோகன்லாலின் அடிபொலி லவ் ஸ்டோரி தெரியுமா?

Tap to resize

suriya

ஆனால் மாதவனும் பிரியமான தோழி படத்தில் பிசியாக நடித்து வந்ததால் நோ சொல்லிவிட்டாராம். இப்படி இரண்டு முன்னணி ஹீரோக்களிடம் சென்று திரும்பிய இந்த கதையை யாரை வைத்து இயக்கலாம் என தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் கேட்டிருக்கிறார் செல்வா. அவரோ தனது மகன் வெளிநாட்டில் படித்துவிட்டு தற்போது வந்துள்ளதாகவும், அவனை ஹீரோவாக போட்டு இயக்கலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார். செல்வாவும் ஓகே சொல்லி இருக்கிறார்.

7g Rainbow colony movie First choice

பின்னர் ரவி கிருஷ்ணாவை செல்வராகவன் நேரில் பார்த்தபோது அவர் சற்று குண்டாக இருந்துள்ளார். பின்னர் உடல் எடையை குறைக்க சொன்னதும் ரவி கிருஷ்ணாவும் ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். அதன்பின்னர் போட்டோஷூட் நடத்தி பார்த்ததில் செல்வாவுக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவரையே ஹீரோவாக நடிக்க வைத்தாராம் செல்வராகவன். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார் ரவி கிருஷ்ணா, அவரின் நடிப்பும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சில்க் ஸ்மிதாவின் நிழலாக இருந்த தாடிக்காரர் யார்? தென்னாட்டு பேரழகியின் தெரியாத பக்கங்கள்

Latest Videos

click me!