சிம்பு:
நயன்தாரா, ஹன்சிகா என அழகு நடிகைகளை காதல் வலையில் வீழ்த்திய நடிகர் தான் சிம்பு. ஆனால் இவர் காதலித்தவர்களுக்கெல்லாம் திருமணம் ஆகிவிட்ட போதிலும் தற்போது வரை, ஏனோ இவருக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை. நயன் - ஹன்சிகாவுக்கு முன்பு, STR சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து, அவருடன் டேட்டிங் செய்துள்ளார். சமீப காலமாக... காதல், கத்தரிக்காய் போன்ற விஷயங்களில் சிக்காமல் திருமணத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.