பாக்கிய லட்சுமி:
இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று 'பாக்கிய லட்சுமி'. கணவர், குடும்பம், குழந்தைகள் தான் வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரி பெண் ஒருவரை, அவரின் கணவர் பல முறை அசிங்கப்படுத்திய போதும், தாங்கி கொண்ட நிலையில்... கணவர் தனக்கு துரோகம் செய்து விட்டு இன்னொரு பெண்ணுடன் பழகுவது தெரிந்த பின்னர், கணவருக்கு எதிராக வளர்ந்து காட்ட வேண்டும் என நினைக்கும் பாக்கிய லட்சுமி என்கிற கதாபாத்திரை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான கதை களம் தான் இந்த சீரியல். ஓவ்வொரு வாரமும் டாப் 10 லிஸ்டில் இந்த சீரியல் இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
அண்ணன் - தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து துவங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. சூழ்நிலை காரணமாக அண்ணன் - தம்பிகள் பிரிந்தாலும், ஒவ்வொரு முறையும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் இருந்து வருகிறார்கள். பல்வேறு ட்விஸ்டுகளுடன்ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தான், பாக்கிய லட்சுமி தொடரை அடுத்து, அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
தொகுப்பாளினி டிடியின் விவாகரத்துக்கு காரணம் பாடி டிமாண்ட்! அது ஒரு நோய்.. பகீர் கிளப்பும் பயில்வான்!
தமிழும் சரஸ்வதியும்:
அம்மா - மகன் இடையே பாசத்திற்கும், நேர்மைக்கும் நடக்கும் போராட்டமாக தற்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தங்கையின் கணவர் சூழ்ச்சியால் குடும்பத்தை விட்டு, பிரிந்து செல்லும் தமிழ், சரஸ்வதியின் துணையோடு மீண்டும் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
தென்றல் வந்து என்னை தொடும்:
டாப் 10 டிஆர் பி பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வந்த இந்த சீரியல் தற்போது கொஞ்சம் டல் அடிக்க துவங்கி விட்டாலும், தொடர்ந்து இந்த சீரியலுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் தற்போது வெற்றி, தன்னுடைய மகள் சுடரை கண்டுபிடித்து விட்டாலும், அவரை சுற்றி பல்வேறு சூழ்ச்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்க அதனை முறியடித்து விட்டு மனைவியுடன் சேர்வாரா? இல்லையா என்பதை நோக்கி தான் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.