தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய்... கடைசியாக நடித்த வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவிய நிலையில், இந்த படத்தை தொடர்ந்து 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகார பூர்வமாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 'வாரிசு' படத்தின் புரமோஷன் மற்றும் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளிலும் படக்குழு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அஜித்தின் 'துணிவு படத்துடன் 'வாரிசு' திரைப்படம், மோத உள்ள நிலையில்... 'வாரிசு' படத்தில் நடிக்க விஜய் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், வாரிசு படத்திற்காக விஜய் சுமார் 125 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. கடைசியாக நடித்த பீஸ்ட் படத்திற்கு கூட 80 கோடி மட்டுமே விஜய் சம்பளமாக பெற்ற நிலையில்... தற்போது அதை விட 45 கோடி, அதிகமாக பெற்றுள்ளார். இந்த தகவல் திரையுலகினரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.