தனுஷுக்கு ‘நோ’சொன்ன சாய்பல்லவி... சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் தவறவிட்ட வாய்ப்பு...!

First Published | Oct 12, 2020, 8:16 PM IST

மாரி 2 படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் இணையவிருந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்த காரணம் உங்களுக்கு தெரியுமா?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் “அசுரன்”. இந்த படத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் மிரட்டி இருந்தார்.
வெக்கை என்ற நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தை தாணு தயாரித்திருந்தார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து இருந்தார்.
Tap to resize

மேலும் தனுஷின் இளைய மகனாக பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸின் மகன் கென் கருணாஸும், மூத்த மகனாக பிரபல இண்டிபென்டென்ட் சிங்கர் டிஜே-வும் நடித்திருந்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் 100 நாட்களை கடந்து தியேட்டர்களில் ஓடியதை அடுத்து வெற்றி விழா கொண்டாடப்பட்டது
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வெற்றிமாறன் முதலில் தேர்வு செய்தது சாய் பல்லவியை தானாம். ஏற்கனவே இவர்கள் காம்பினேஷினில் வெளியான மாரி 2 திரைப்படம் வேற லெவலுக்கு ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தனக்கு கூறிய கதாபாத்திரம் பிடிக்கவில்லை எனக்கூறி சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டாராம். என்னடா இது? அசுரன் படத்தில் பேசப்பட்ட பச்சையம்மா கேரக்டரை எப்படி சாய் பல்லவி வேண்டாம் என சொன்னார் என பொங்காதீங்க.
சாய் பல்லவியை நடிக்க அழைத்தது மஞ்சு வாரியார் நடித்த பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் இல்லை, அம்மு அபிராமி நடித்த தனுஷின் அக்கா மகள் கதாபாத்திரமாம். அதனால் தான் கேரக்டர் வெயிட்டாக இல்லை எனக்கூறி நடிக்க மறுத்துவிட்டாராம்.

Latest Videos

click me!