Do you know Sadha not first choice in jayam movie: ரவி மோகன் ஹீரோவாக நடித்த, 'ஜெயம்' படத்தில் சதாவுக்கு பதில் ஹீரோயினாக நடிக்க இருந்தது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
முதல் படத்திலேயே வெற்றி படங்களை கொடுக்கும் நடிகர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் தமிழில் 'ஜெயம்' படத்தின் மூலம் கடந்த 2003-ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானவர் தான் ரவி மோகன். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இவரை ரசிகர்கள் அன்போடு ஜெயம் ரவி என அழைக்க துவங்கினர். 20 வருடங்களுக்கு மேலாக ஜெயம் ரவியாகவே ரசிகர்களால் அறியப்பட்ட ரவி, இந்த ஆண்டின் துவக்கத்தில் தன்னுடைய பெயரை ரசிகர்கள் அனைவரும் ரவி மோகன் என அழைக்குமாறு அறிக்கை வெளியிட்டு கேட்டு கொண்டார்.
24
தெலுங்கு படத்தின் ரீ-மேக்
தற்போது ரவி மோகன் அறிமுகமான 'ஜெயம்' படத்தில், கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழில் 'ஜெயம்' படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, 'நிதின்' நடிப்பில் தெலுங்கில் 'ஜெயம்' என்கிற பெயரிலேயே இப்படம் ரிலீஸ் ஆனாது. இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு கதையில் சிறிய மாற்றங்களை செய்து, இயக்குனர் மோகன் ராஜா, தன்னுடைய தம்பியை ஹீரோவாக ஜெயம் படத்தின் ரீமேக்கில் களமிறங்கினார்.
34
சதா முதலில் ஹீரோயினாக தேர்வுசெய்யப்படவில்லை:
சதாவின் நடிப்பு, நடிப்பும் எதார்த்தமான அழகு தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்து போலவே, தமிழ் ரசிகர்களை வசீகரிக்கும் என்பதால் சதாவையே இந்த படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் தெலுங்கில் சதா முதலில் ஹீரோயினாக நடிக்க கமிட் செய்யப்பட வில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் இந்த தகவலை அண்மையில் நடிகர் நிதின் தன்னுடைய படவிழா ஒன்றில் பேசியுள்ளார்.
44
ராஷ்மி கெளதம்:
அதாவது சதாவுக்கு முன்பு இந்த படத்தில் நடிக்க இருந்தவர், நடிகை ராஷ்மி கெளதம் தானாம். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே அவருக்கு பதில், சதா நடிக்க கமிட் ஆனார். ஒருவேளை தெலுங்கில் ராஷ்மி கெளதம் கதாநாயகியாக நடித்திருந்தால், மோகன் ராஜாவின் தேர்வும் ராஷ்மியாகவே இருந்திருப்பார் என கூறப்படுகிறது.