Samantha: ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இவ்வளவு சம்பளமா? நயன்தாராவையே மிஞ்சிய சமந்தா..!!

First Published | Nov 17, 2021, 1:59 PM IST

விவாகரத்துக்கு பிறகு மீண்டும் திரைப்பட வாய்ப்புகளில் பிசியாகி வரும் சமந்தா (Samantha) , தற்போது ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட, கோடிகளில் சம்பளம் வாங்குவதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகினரை செம்ம ஷாக் ஆக்கியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்துல உருவாகியுள்ள திரைப்படம் ‘புஷ்பா’ .  இந்த 2 பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தின், முதல் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

மரம் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படம், சுமார் 250 கோடி ரூபாய் செலவுல தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என்று 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

Tap to resize

இதில் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தில் கிராமத்து வேடத்தில் நடித்திருந்தாலும், வழக்கத்தை விட இந்த படத்தில் கவர்ச்சியை சற்று கூட்டி காண்பித்துள்ளார்.

அதே போல்  பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான வெளியான இரண்டு லிரிக்கல் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது மற்றொரு பாடல் குறித்த தகவல் தான் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா குத்தாட்டம் போட உள்ளதாகவும், இதற்காக அவருக்கு ரூபாய் 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதலில் இந்த பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஒருவரை தான் நடனம் ஆட வைக்க வைக்க படக்குழு திட்டமிட்டதாகவும், ஆனால் இப்போது, சமந்தாவே பாலிவுட் வரைக்கும் பிரபலமாகி விட்டதால் படக்குழு சமந்தாவை ஓகே செய்து விட்டார்களாம்.

ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை ஒப்புக்கொள்ள சமந்தா தயங்கினாலும், பின்னர் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரும் சமந்தாவின் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும் மிகப்பெரிய தொகை ஒரே ஒரு பாடலுக்கு கிடைப்பதால் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாரா உள்ளிட்ட பட பாலிவுட் நாயகிகள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ள நிலையில், அவர்களையே சம்பள விஷயத்தில் சமந்தா பீட் செய்துள்ளது ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!