Jai Bhim: 'ஜெய்பீம்' மலையாள படத்தில் சூர்யாவுக்கு குரல் கொடுத்தது இந்த தமிழ் ஹீரோவா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

First Published | Nov 17, 2021, 1:14 PM IST

சூர்யா (Suriya) நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது மற்றும் இன்றி தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள 'ஜெய்பீம்' (Jai Bhim) திரைப்படத்தின், மலையாள மொழி படத்திற்கு பிரபல தமிழ் ஹீரோ தான் சூர்யாவிற்கு குரல் கொடுத்துள்ளார் என்கிற தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சித்தரித்து வெளியாகும் கற்பனை கதைகளை விட, உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் எடுக்கப்பட்ட தனுஷின் 'கர்ணன்' செம்ம ஹிட் ஆன நிலையில், நடிகர் சூர்யாவின் 'ஜெய்பீம்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைக் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், இடம்பெற்ற ஒரு சில காட்சிகள் குறிப்பிட்ட சமூகத்தை கொடூரமானவர்கள் என காட்டுவது போல் எடுக்கப்பட்டுள்ளதாக பிரபல அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை, இந்த படத்தை தயாரித்து நடித்துள்ள சூர்யாவிற்கும், படத்தின் இயக்குனருக்கும் தெரிவித்து வருகிறார்கள்.

Tap to resize

அதே போல் இந்த படத்தில் கொடூர வில்லனாக வரும் துணை ஆய்வாளர் குருமூர்த்தியின் கதாபாத்திரமும் அவருடைய வீட்டில் இருக்கும் அக்னி கலச காலாண்டரும் சர்ச்சைக்கு ஆளான நிலையில், பின்னர் அது பின்னர் லட்சுமி காலண்டராக மாற்றப்பட்டது.

ஒரு புறம், சூர்யாவிற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், திமுக போன்ற திராவிட கட்சிகளும், சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

பரபரப்பாக பேசப்பட்டு வரும், 'ஜெய்பீம்' படம் குறித்த பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில், தமிழ் உட்பட 5 மொழிகளில் வெளியான 'ஜெய்பீம்' படத்தின் மலையாள பதிப்பிற்கு சூர்யாவுக்கு குரல் கொடுத்தது பிரபல தமிழ் ஹீரோ நரேன் தானாம்.

அந்த அனுபவத்தை பற்றி அவர் கூறும்போது,  'மிகப் பெரிய ஸ்டாரான சூர்யா சாருக்கு குரல் கொடுத்ததில் பெருமிதமடைகிறேன். பெரும் வெற்றி பெற்ற 'சூரரைப்போற்று' படத்துக்கும் நான் தான் டப்பிங் பேசினேன்.

'ஜெய்பீம்' படத்துக்கும் டப்பிங் பேச அழைத்தபோது ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் நினைத்த மாதிரி இல்லாமல் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. சூர்யா சாரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மிக நுட்பமாக இருந்ததால் பிரேம் பை பிரேம் கவனித்து பேசியது புது அனுபவமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.  அதுமட்டுமல்ல, இந்த அனுபவம் சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது.   மலையாளத்தில் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு அளித்த சிபு பற்றும் ஜாலி ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

நடிகர் நரேன் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான, 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் ஹீரோவாக மாறியவர். இதை தொடர்ந்து, 'பள்ளிக்கூடம்', 'அஞ்சாதே', 'தம்பி கோட்டை' என பல ஹீரோவாக நடித்துள்ளார்.

தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் இவர், பல படங்களில் டப்பிங் கலைஞர்ராகவும் பணியாற்றியுள்ளார்.  கடைசியாக தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நரேன், மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!