பிக்பாஸ் 4 சீசனை தொகுத்து வழங்க இவ்வளவு சம்பளமா?... கோடிகளை அள்ளப் போகும் பிரபல நடிகர்...!

First Published | Aug 26, 2020, 8:58 PM IST

தெலுங்கில் பிக்பாஸ் 4 சீசனை தொகுத்து வழங்க உள்ள நாகார்ஜுனாவிற்கு எத்தனை கோடி சம்பளம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கமல் ஹாசன் 25 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற 3 சீசன்களுக்கும் கமல் ஹாசனுக்கு ரூ.15 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை 10 கோடி ரூபாயை உயர்த்தி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதே போல் தற்போது தொடங்க உள்ள தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாகார்ஜுனாவிற்கு பெறப்போகும் சம்பளம் குறித்து சுவாரஸ்யமான தகவல் கசிந்துள்ளது.
Tap to resize

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனுக்கான புரோமோஷன் சமீபத்தில் வெளியிடப்பட்டு, அது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-யை நாகார்ஜுனா தொகுத்து வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பான புரோமோ ஷூட்டில் நாகார்ஜுனா பங்கேற்ற புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.​
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நாகார்ஜுனா ஒரு எபிசோட்டிற்கு ரூ.12 லட்சம் ரூபாய் வீதம் மொத்தமாக 8 கோடி ரூபாயை சம்பளமாக பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Videos

click me!