நலமுடன் வீடு திரும்பினார் பீட்டர் பால்... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் வனிதா ரசிகர்கள்...!

First Published | Aug 26, 2020, 8:34 PM IST

உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீட்டர் பால் குறித்து வனிதா நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வனிதாவின் 3 ஆவது கணவர் பீட்டர்பாலுக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் இதுகுறித்து, வனிதாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், “தன் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி, நிச்சயம் இந்த கடுமையான காலத்தை கடந்து வந்துவிடுவேன். கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. நிச்சயம் அற்புதம் நடக்கும், பீட்டர் பாலை மீட்டு கொண்டு வருவேன்” என உருக்கமாக பதிவிட்டார்.
Tap to resize

அதேபோல், “நேற்றைய தினத்தை என்னால் மறக்கவே முடியாது. கடவுள் எங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக தான் சோதனையைக் கொடுத்து வருகிறார், என்றாலும் நிச்சயம் அதிசயம் நடக்கும். நான் கடவுளை மிகவும் நம்புகிறேன். எங்கள் காதல் வலிமையானது, அது எங்களை கைவிடாது. அவருக்காக நானும் எனக்காக அவரும் எப்போதும் இருப்போம்’என்று கூறியுள்ளார்.
இதேபோல் இன்னொரு ட்வீட்டில் ’திருமணம் என்பது சட்ட ரீதியான ஒரு அங்கீகாரம் அல்லது காகிதம் அல்ல, அது உணர்வு பூர்வமானது. உனக்கு நான், எனக்கு நீ என ஆன்மாக்கள் ஒன்றிணையும் விஷயம்., சிலருக்கு வேண்டுமானால் திருமணம் மற்றும் விவாகரத்து வெறும் பேப்பர் ஆக இருக்கலாம்’ என்று கூறியிருந்தார்.
மற்றொரு ட்வீட்டில் “எனது அன்புக்குரிய பீட்டர்பால் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்யும் அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றி. அவர்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்” என ரசிகர்களுக்கு நன்றி கூறினார்.
இன்று வனிதா பதிவிட்டுள்ள ட்வீட்டில் ஆல் இஸ் வெல்... வீட்டுக்கு வந்தாச்சு.. என பதிவிட்டுள்ளார். அதாவது கணவர் பீட்டர் பால் உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார் என்பதை தான் அப்படி கூறியுள்ளார் போல் தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கடவுளுக்கு நன்றி கூறிவருகின்றனர்.

Latest Videos

click me!