' பாவா ' லட்சுமணன் வாழ்க்கையில் இத்தனை துயரங்களா? ஓடி போய் ஆறுதல் கூறும் காமெடி நடிகர்கள்!

Published : Jun 17, 2023, 12:14 AM IST

பிரபல நகைச்சுவை நடிகர்  'பாவா ' லட்சுமணன் சர்க்கரை நோய் காரணமாக மருத்துவமனையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்... அடுத்தடுத்து இவரை தேடி சென்று ஆறுதல் கூறு வருகிறார்கள் காமெடி நடிகர்கள்.  

PREV
16
' பாவா ' லட்சுமணன் வாழ்க்கையில் இத்தனை துயரங்களா? ஓடி போய் ஆறுதல் கூறும் காமெடி நடிகர்கள்!

மாயி படத்தில் மாயன்ன வந்திருக்காஹ... என இழுத்து இழுத்து கூறி அனைவரது நினைவிலும் பச்சக் என பதித்தவர் 'பாவா' லக்சுமணன். இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில், காமெடி நடிகராக நடித்துள்ள இவர், தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சர்க்கரை வியாதிக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். 

26

காலில் ஏற்பட்ட காயத்தை மருந்துகள் மூலம் சரி செய்ய, மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும், முடியாமல் போகவே, வேறு வழியின்றி அவருடைய ஒரு காலில் கட்டை விரல் மற்றும் அதற்கடுத்த இரண்டு விரல்கள் அகற்ற எடுக்கப்பட்டு விட்டது. இன்னொரு காலிலும் கட்டை விரல் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம்.

அட ராமா... இது என்ன பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்திற்கு தமிழகத்தில் வந்த சோதனை! காத்து வாங்கும் திரையரங்குகள்!

36

காலில் ஏற்பட்ட காயத்தை மருந்துகள் மூலம் சரி செய்ய, மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும், முடியாமல் போகவே, வேறு வழியின்றி அவருடைய ஒரு காலில் கட்டை விரல் மற்றும் அதற்கடுத்த இரண்டு விரல்கள் அகற்ற எடுக்கப்பட்டு விட்டது. இன்னொரு காலிலும் கட்டை விரல் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம்.

46

மேலும் இப்போது இவர் இருக்கும் நிலையில், இவரது மருந்து மாத்திரைகளுக்கு கூட நபர்களை தவிர உதவுவதற்கு என சொந்த பந்தங்கள் யாரும் இல்லை. தனக்கு ஒரே ஒரு அக்கா மட்டுமே இருப்பதாக கூறும் 'பாவா' லட்சுமணன் அவரும் தனக்கு உதவும் நிலையில் இல்லை. ஏழ்மையில் தான் உள்ளார் என, ஒரு குழந்தை போல் பேசுகிறார்.

சொன்னதை செய்ய தவறிய விஜய்! 'லியோ' போஸ்டரால் வெடித்த சர்ச்சை .. தளபதியை எச்சரிக்கிறாரா பிரபல அரசியல்வாதி?

56

அதே நேரம், தனக்கு நெருக்கமான காமெடி நடிகர்கள் யாரையாவது பார்த்தால்... தன்னுடைய வேதனையை கண்ணீரோடு வெளிப்படுத்துகிறார். பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ள போதிலும் இதுவரை இவரை முன்னணி நடிகர்கள் யாரும் நேரில் வந்து சந்திக்கவில்லை என்றாலும், காமெடி நடிகர் தாடி பாலாஜி, முத்து காளை போன்ற சிலர் நேரில் வந்து நலம் விசாரித்து விட்டு செல்கிறார்கள். தங்களால் முடிந்த ஒரு தொகையையும் அவரின் உதவிக்கு கொடுத்து செல்கிறார்கள்.

66

அதே போல் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களும்,  லட்சுமணனை நேரில் சந்தித்து மேற்கொண்டு சிகிச்சைக்காக அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நடிகர் சங்கத்தின் மூலமும், பெரிய நடிகர்கள் மூலமும் இவருக்கு ஏதேனும் உதவிகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஸ்ரீதேவி முதல் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் வரை... பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டு அழகான 15 ஹீரோயின்கள்!

click me!

Recommended Stories