தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு, பிரபல தெலுங்கு நடிகை நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், தன்னுடைய கணவரின் நினைவாக பல்வேறு டாட்டூக்களை போட்டு கொண்டார். நான்கு வருடங்கள் மிகவும் சந்தோஷமான நட்சத்திர தம்பதிகளாக இருந்த சமந்தாவும், நாகசைதன்யாவும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற உள்ளதை வெளிப்படையாக அறிவித்தனர். எனவே தன்னுடைய கணவரின் நினைவாக சமந்தா போட்டுக்கொண்ட
பல டாட்டூக்களை அழித்ததாக கூறப்பட்டது.