siva manasula Sakthi Anuya
துபாயை சேர்ந்தவரான அனுயா, கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த மஹெக் என்கிற இந்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து அவரை தமிழில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் ராஜேஷ். அவர் இயக்கத்தில் வெளிவந்த சிவா மனசுல சக்தி திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் அனுயா.
siva manasula Sakthi Anuya
அப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அனுயா. அப்படத்தில் இவர் ஆர்.ஜே.வாக நடித்திருந்தார். இவரும், ஜீவாவும் எலியும் பூனையுமாக சண்டைபோட்டுக்கொண்டு ஜாலியாக நடித்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் அறிமுகமான முதல் படமே ஹிட் ஆனதால் அனுயாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன.
siva manasula Sakthi Anuya
பின்னர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த நண்பன் படத்தில் நடித்தார் அனுயா. அப்படத்தின் ஹீரோயின் இலியானாவின் தங்கையாக நடித்திருந்தார் அனுயா. இதன்பின்னர் அவருக்கு தமிழில் பெரியளவில் வாய்ப்பு கிடைக்காததால் அப்படியே சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார் அனுயா.
siva manasula Sakthi Anuya
இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் முதல்முறையாக நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் அனுயா. அந்நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரங்களிலேயே முதல் ஆளாக அனுயா எலிமினேட் செய்யப்பட்டார்.