பாலிவுட் திரை உலகில் காமெடி நடிகராகவும், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து, லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னுடைய ஈடு இணை இல்லா காமெடி மூலம் சிரிக்க வைத்தவர் ராஜூ ஸ்ரீவாஸ்தவா. பிட்னஸிலும் அதிக கவனம் செலுத்தும் இவர், ஜிம்மில், உடல்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மயங்கி கீழே விழுந்தார். இதை அடுத்து, உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.