'அன்னம்' சீரியலில் இருந்து வெளியேறிய திவ்யா கணேசன்! இனி இவங்க தான் ரம்யாவா?

Published : Oct 24, 2025, 03:20 PM IST

Annam Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் தொடரில் இருந்து, இரண்டாவது நாயகியாக நடித்து வந்த திவ்யா கணேஷ் திடீரென விலகியுள்ளார்.

PREV
16
இளசுகளை கவர்ந்த சீரியல்கள்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுமே, இல்லத்தரசிகளின் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமானவை. சமீப காலமாக இளவட்ட ரசிகர்களையும் கவரும் விதத்தில், சீரியல்கள் எடுக்கப்பட்டு வருவதால் பல இளைஞர்களும் சீரியல்களை விரும்பி பார்க்கிறார்கள்.

26
TRP-யில் கெத்து காட்டும் அன்னம்:

அந்த வகையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக... சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் 'அன்னம்'. TRP -யில் டாப் 5 இடத்தை பிடிக்கும் இந்த தொடரில், 'அயலி' வெப் தொடர் மூலம் பிரபலமான அபி நக்ஷத்ரா ஹீரோயினாக நடித்து வருகிறார். ஹீரோவாக 'கனா காணும்' காலங்கள் மூலம் பிரபலமான பரத் குமார் நடிக்கிறார். மேலும் மனோகர் கிருஷ்ணா, ராஜ லட்சுமி, மகாநதி ஷங்கர், அஷ்வின் கார்த்திக் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

36
கதைக்களம்:

இந்த சீரியலில், இரண்டாவது நாயகியாக நடித்து வந்தவர், திவ்யா கணேசன். கார்த்திக் (பரத்குமார்) மற்றும் ரம்யா (திவ்யா) இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள். காதலரின் விருப்பப்படி அரசு உத்தியோகத்தில் சேர முயற்சிக்கும் ரம்யா, கமிஷ்னர் பதவிக்கு வருகிறார். இதனை சர்பிரைஸாக கார்த்தியிடம் சொல்ல ரம்யா வரும் போது தான், கார்த்திக் சூழ்நிலை காரணமாக அப்பாவின் மானத்தை காப்பாற்ற, அன்னத்தை (அபி நக்ஷத்ராவை) திருமணம் செய்து கொண்டது தெரியவருகிறது.

46
பழிவாங்க நினைக்கும் ரம்யா:

தன்னை காதலித்து ஏமாற்றிய கார்த்திக்கை பழிவாங்க நினைக்கும் ரம்யாவுக்கு, கார்த்திக் பில் கலெக்டராக வேலை செய்யும் இடத்திலேயே கமிஷனராக பணியமர்த்த படுகிறார். மேலும் கார்த்திக்கை பழிவாங்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அதில் இருந்து அன்னம், தன்னுடைய கணவரை மீட்க சாதாரண பெண்ணாக போராடுகிறார்.

56
சீரியலை விட்டு வெளியேறிய திவ்யா:

அன்னத்தின் போராட்ட குணம், உண்மையான அன்பு போன்றவற்றை பார்த்து கார்த்தி தற்போது அன்னத்தை காதலிக்க துவங்கிய நிலையில், ரம்யாவும் கொடூர வில்லியாக மாறியுள்ளார். தன்னுடைய கதாபாத்திரம் வில்லியாக மாறி வருவது பிடிக்காத காரணத்தால், திவ்யா கணேசன் அதிரடியாக 'அன்னம்' சீரியலில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

66
திவ்யாவுக்கு பதில் இவரா?

திவ்யா கணேசனுக்கு பதிலாக, ரம்யா கதாபாத்திரத்தில் நடிக்க புதிய நடிகை ஒருவரும் கமிட் ஆகி உள்ளார். அதாவது பிரியாத வரம் வேண்டும் தொடரில் நடித்து பிரபலமான ப்ரியங்கா தான், புதிய ரம்யாவாக நடிக்க உள்ளாராம். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories