லோகா சாப்டர் 1-ஐ ஓடிடியில் வெளியிடாமல் பூச்சாண்டி காட்டும் படக்குழு... லீக்கான புது ரிலீஸ் தேதி..!

Published : Oct 24, 2025, 12:44 PM IST

கல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா சாப்டர் 1' திரைப்படம் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்ற நிலையில், அதன் ஓடிடி ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

PREV
14
Lokah Chapter 1 OTT Release Date

2025-ல் சில படங்கள் எந்த ஆரவாரமும் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தன. இந்தப் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலையும் ஈட்டின. அப்படிப்பட்ட ஒரு படம்தான் 'லோகா சாப்டர் 1'. இயக்குனர் டொமினிக் அருண் இயக்கிய இந்தப் படம் ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியானது. இது ஒரு மலையாள சூப்பர் ஹீரோ திரைப்படம், துல்கர் சல்மான் தயாரிப்பில் வேஃபேரர் ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் OTT வெளியீடு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. முன்னதாக அக்டோபர் 17-ம் தேதியே OTT-யில் வெளியாகவிருந்தது, ஆனால் திரையரங்குகளில் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்ததால் அது நடக்கவில்லை.

24
லோகா சாப்டர் 1 எப்போ OTTக்கு வரும்?

கல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா சாப்டர் 1' திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படம் அக்டோபர் 31 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து OTT வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. வெறும் 30 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், பாக்ஸ் ஆபிஸில் 301.45 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. வெளியான 7 நாட்களுக்குள் உலகளவில் 100 கோடி கிளப்பில் இணைந்தது. 300 கோடி வசூலைத் தாண்டிய முதல் மலையாளப் படம் இதுவாகும்.

34
'லோகா சாப்டர் 1' பட கதை

இப்படத்தில் கல்யாணியுடன் நஸ்லென், சாண்டி மாஸ்டர், அருண் குரியன் மற்றும் சந்து சலீம் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். 'லோகா சாப்டர் 1' படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சந்திரா என்ற மர்மமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமைதியைத் தேடி கர்நாடகாவிற்கு வரும் அவர், அங்கு உறுப்பு கடத்தல் மற்றும் தீய சக்திகளின் நிழல் உலகத்தில் சிக்கிக் கொள்கிறார். சந்திரா தனது அமானுஷ்ய சக்திகளை உணரும்போது, இருண்ட உலகத்துடனான அவரது போராட்டம் மேலும் தீவிரமடைகிறது. அதன்பின் என்ன ஆனது என்பதே இதன் கதைச்சுருக்கம்.

44
லோகா 2ம் பாகம்

இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. செப்டம்பர் 27 அன்று இதன் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'லோகா சாப்டர் 2' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார். வேஃபேரர் ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் துல்கர் சல்மானும், டோவினோ தாமஸும் இணைந்து தயாரிப்பார்கள். இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories