கவின் ஹீரோவாக நடித்துள்ள மாஸ்க் திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகர்களில் கவினும் ஒருவர். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு முன் வரை சின்னத்திரை நடிகராக அறியப்பட்ட கவின், அந்நிகழ்ச்சிக்கு பின்னர் வெள்ளித்திரை நாயகனாக உருவெடுத்தார். பிக் பாஸூக்கு பின் அவர் நடித்த லிஃப்ட், டாடா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. இதில் டாடா திரைப்படம் கவினுக்கும் நல்ல மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது. அப்படத்தினால் அவர் நடிப்பில் வெளிவந்த அடுத்த படமான ஸ்டார் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிவாகை சூடியது.
24
தொடர் தோல்விகளை சந்தித்த கவின்
ஸ்டார் படத்திற்கு பின்னர் கதை தேர்வில் கோட்டைவிட்டு வருகிறார் கவின். அப்படத்திற்கு பின்னர் அவர் நடித்த பிளெடி பெக்கர் மற்றும் கிஸ் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்ததன. இதில் பிளெடி பெக்கர் படத்தை தயாரித்த நெல்சன், அப்படத்தின் மூலம் கடும் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கி இருந்தார். அதன்பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்த கிஸ் படம் வந்த வேகத்தில் தியேட்டரைவிட்டு தூக்கப்பட்டது. அப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
34
கவினின் அடுத்த படம்
இந்த நிலையில் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கவின். அவர் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் தயாராகி வருகிறது. அதில் ஒரு படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறார். அப்படத்திற்கு ஹாய் என பெயரிடப்பட்டு உள்ளது. அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் மாஸ்க். இப்படத்தை ஆண்ட்ரியா தயாரித்து உள்ளார். இப்படத்தில் கவினுடன் ஆண்ட்ரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
அதன்படி வருகிற நவம்பர் மாதம் 21-ந் தேதி கவின் நடித்த மாஸ்க் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை விகர்னன் அசோக் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொண்டிருக்கிறார். மேலும் ஒளிப்பதிவு பணிகளை ஆர்.டி.ராஜசேகர் கவனித்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டராக பீட்டர் ஹெயின் மற்றும் விக்கி பணியாற்றி உள்ளனர். இப்படமாவது கவினுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.