
68 வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சூரரைப் போற்று, மண்டேலா சிவரஞ்சணியும் இன்னும் சில பெண்களும் உள்ளிட்ட பலப்படங்கள் விருதுகளை குவித்தன. இதில் சூரரைப் போற்று ஐந்து தேசிய விருதுகளை பெற்றுள்ளது. சுதா கோங்காரா இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்கராவுக்கும், சிறந்த பின்னணி இசை ஜிவி பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சிறந்த படத்திற்கான விருதையும் சூரரைப் போற்று பெற்றது.
அதேபோல யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது கிடைத்தது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சிகள் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது. யோகிபாபு,ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவான இந்த படத்தை மடோன் அஸ்வின் என்பவர் இயக்கியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி
இதை தொடர்ந்து இயக்குனர் வசந்த இயக்கத்தை கடந்தாண்டு ஓடிடி தளத்தில் வெளியான சிவரஞ்சனையும் இன்னும் சில பெண்களும் என்ற திரைப்படம் மூன்று விருதுகளை அள்ளி உள்ளது. சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களுக்கும் , சிறந்த படத்தொகுப்பிறகான விருது ஸ்ரீகர் பிரசாத்துக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருதை லட்சுமி பிரியா பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. சிறந்த திரைக்கதைக்கான 68 - வது தேசிய விருதை தட்டி சென்ற மண்டேலா
இந்த வருட தேசிய விருதை வென்றெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மூன்று படங்கள் ஏமாற்றத்தை பெற்றுள்ளன. அந்த வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது க/பெ ரண சிங்கம் அதாவது கணவர் பெயர் ரண சிங்கம் என்பதுதான் இந்த படத்தின் முழு விளக்கம். 2020 ஆம் ஆண்டு இந்த படம் அரசியல் நாடகமாக திரையிடப்பட்டது. அறிமுக இயக்குனரான பி விருமாண்டி இயக்கத்தில் வெளியான இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். உண்மை சம்பவத்தின் அடிப்படையாக இந்த படம் உருவாகி இருந்தது.
மேலும் செய்திகளுக்கு.. GV Prakash : இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன்... முதல்முறையாக தேசிய விருது வென்ற ஜிவி பிரகாஷ் உருக்கம்
அரியநாச்சி என்கிற ஏழைப் பெண் துபாயில் இருந்து தனது இறந்த கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர படும் இன்னல்களை இந்த படத்தில் சித்தரிக்கப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் வெளியிடப்பட்டதால் ஓடிடியில் வெளியான இது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல பாராட்டுகளை பெற்றது. கட்டாயம் தேசிய விருதை வெல்லும் என பெருத்த நம்பிக்கை நிலவி வந்தது.
அடுத்தாக காவல்துறை உங்கள் நண்பன் என்கிற படம் 2020 ஆம் ஆண்டு வெளியானது ஆர்.டி.எம் எழுதிய இந்த படம் க்ரைம் திரில்லராக உருவானது. சுரேஷ் ரவி மற்றும் ரவீனா ரவி ஆகியோர் முக்கிய இடத்தில் நடித்திருந்தனர். 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த படம் வெளியானது. மனைவி கடத்தப்பட்டது குறித்து புகார் அளிக்க நாயகன் முயல்கிறார். ஆனால் காவல்துறை அவர் மீது எதிர்ப்பை தெரிவிக்கிறது இந்த சிக்கல்களை கடந்து நாயகன் மனைவியை மீட்பாரா என்பதே படத்தின் கதையாக அமைந்தது. இந்த படமும் தேசிய விருது லிஸ்டில் எதிர்பார்க்கப்பட்ட படமாகும்.
தேசிய விருது பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட மற்றும் ஒரு படம் கன்னிமாடம் இந்த படமும் 2020 ஆம் ஆண்டு தான் வெளியானது. இந்த படத்தை போஸ் வெங்கட் இயக்கியிருந்தார். ஸ்ரீராம் கார்த்திக் சாயாதேவி மற்றும் விஷ்ணு ஆகியோர் புது முகங்களாக அறிமுகமாக இருந்தனர். விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.