தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார் நயன்தாரா. மலையாளியான இவர், அங்கு ஒரு சாதாரண டிவி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தொடர் வெற்றிகளால் மளமளவென உயர்ந்தார். அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் திரையை பகிர்ந்துகொண்ட நடிகை நயன்தாரா, தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார்.
தமிழில் சரத்குமார் ஜோடியாக முதல் படத்தில் நடித்த நயன்தாரா, அதன்பிறகு அஜித், ரஜினிகாந்த், விஜய், விஷால், சிம்பு, சூர்யா என கமல்ஹாசனைத் தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து டாப் ஹீரோக்களுடனும் நடித்து அசத்தினார். தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, வெங்கடேஷ், என்.டி.ஆர், பிரபாஸ் போன்ற நடிகர்களும் ஆடிப் பாடினார். நடிகையாக அவருக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'சந்திரமுகி' தான்.
நயன்தாராவுக்கு ஒரு பழக்கம் உண்டு. அவர் எவ்வளவு பெரிய ஸ்டாருடன் நடித்தாலும், எந்தப் படமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும், அவர் புரமோஷனுக்கு மட்டும் செல்லமாட்டார். அது சென்டிமென்டா அல்லது 'நான் ஏன் செல்ல வேண்டும்' என்ற அகங்காரமா என்று தெரியவில்லை, ஆனால் அவர் மிகக் குறைவாக, தவிர்க்க முடியாத சில படங்களின் புரமோஷன்களுக்கு மட்டுமே செல்வது குறிப்பிடத்தக்கது.