Aditi Shankar: ஷங்கர் மகள் அதிதிக்கு அடித்த ஜாக்பார்ட்... கார்த்தியை தொடர்ந்து இந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா?

Published : Dec 20, 2021, 11:18 AM IST

நடிகர் கார்த்திக்கு (Karthi) ஜோடியாக தற்போது 'விருமன்' படத்தில் (Viruman Movie) நடித்து வரும் அதிதி ஷங்கர் (Aditi Sahankar), இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே மற்றொரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.  

PREV
19
Aditi Shankar: ஷங்கர் மகள் அதிதிக்கு அடித்த ஜாக்பார்ட்... கார்த்தியை தொடர்ந்து இந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, யாரும் எதிர்பார்க்காத விதமாக தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். தமிழில் இவர் நடிக்கும் முதல் படத்தை, கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய 'முத்தையா' இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார்.

 

29

அதிதி ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படமான 'விருமன்' படத்தை, தொடர்ந்து பல தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர்.

 

39

இப்படத்தில், மதுரை பெண்ணாக நடிக்கிறார் அதிதி. தேன்மொழியாக மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில்  நடைபெற்று வருகிறது.

 

49

இந்த படம் வெளியான பின்னரே அடுத்தடுத்த படங்களில் அதிதி கமிட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

59

கடந்த மாதம் வெளியாகி, தற்போது வரை... திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் 'மாநாடு' படத்தின் (Manadu Movie) ஹீரோ சிம்புவுக்கு (Simbu) ஜோடியாக தான் அதிதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

69

தற்போது சிம்பு, இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே... இந்த படத்தை தொடர்ந்து, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பத்து தல படத்திலும் நடிக்க உள்ளார்.

 

79

இந்த இரு படங்களைத் தொடர்ந்து சிம்பு இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிக்க உள்ள 'கொரோனா குமார்' படத்தில் தான் ஷங்கர் மகள் அதிதி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவின் 48 ஆவது படமாக உருவாகியுள்ள இந்த இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

89

சமீபத்தில் தான் அதிதி டாக்டர் படிப்பை முடித்து பட்டம் பெற்ற நிலையில், இனி முழுமையாக திரைப்படங்களில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில், இந்த படத்தின் படப்பிடிப்பு  துவங்க உள்ளது.

 

99

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தே தீர வேண்டும் என்கிற முனைப்பில் நடித்து வரும் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளது, அவருக்கு அடித்த ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories