பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் ஆரம்பிக்கும் முன்னால் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
2017ம் ஆண்டே இந்தியன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியான போதும், ஷூட்டிங் கடந்த ஆண்டு தான் தொடங்கியது.இந்நிலையில் பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.
பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் படப்பிடிப்பை தொடங்கலாம் என படக்குழுவினர் திட்டமிட்டு வந்த நேரத்தில் ஓட்டுமொத்த உலகையும் கொரோனா ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது. அதனால் மீண்டும் படப்பிடிப்பிற்கு தடங்கல் ஏற்பட்டது.
தற்போது தமிழக அரசு படப்பிடிப்புகளை நடத்த அனுமதி கொடுத்தாலும் 75 பேர் மட்டுமே ஷூட்டிங்கில் பணியாற்ற அனுமதி என்பது, இந்தியன் 2 படத்திற்கு சாத்தியமில்லை என்பதால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குமா? என்பது குறித்து எதுவும் தெரியும் முன்பே கமல் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி வைத்து அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இடையில் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்க உள்ளதால் இந்தியன் 2 நிலைமை என்ன என்றும் வதந்தி பரவியது.
இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ளார். தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ரகுல் ப்ரீத் சிங் இந்தியன் 2 படத்தில் தொடர்வாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்படி ஆரம்பத்தில் இருந்தே ஆண்டவர் படத்திற்கு சிக்கல் மேல் சிக்கலாக எழுந்து வருகிறது.
பட்ஜெட் குறைப்பு, கமல் கால்ஷீட் என பல பிரச்சனைகளை தீர்க்க வேண்டியிருக்கும் நிலையில், இப்படியொரு புது பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து கிளப்பியுள்ளதால் இயக்குநர் ஷங்கர் செம்ம அப்செட்டில் இருப்பதாக தகவல்.