Selvaraghavan Latest Speech: இயக்குனர் செல்வராகவன், அடிக்கடி தன்னுடைய மனதில் படும் கருத்துக்களை வீடியோ மூலம் வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் தான் செல்வராகவன். தன்னுடைய தந்தை இயக்கிய 'துள்ளுவதோ இளமை' படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய செல்வராகவன், இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய தம்பி தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கிய படம் தான் 'காதல் கொண்டேன்'. 2003-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தை தொடர்ந்து, '7ஜி ரெயின்போ காலனி படத்தை இயக்கி வெற்றி கொடுத்தார்.
26
செல்வராகவன் ரெயின்போ காலனி 2 படத்தை இயக்கி வருகிறார்:
இதன் பின்னர் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என் ஜி கே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் போன்ற படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களில் சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றபோதும், ஒரு சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. தற்போது ரெயின்போ காலனி 2 படத்தை இயக்கி வருகிறார்.
திரைப்படங்கள் இயக்குவதில், தன்னுடைய திறமையை நிரூபித்து விட்ட இயக்குனர் செல்வராகவன் (Selvaraghavan), சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு நடிகராகவும் கலக்கி வருகிறார். கடைசியாக தனுஷ் (Dhanush) இயக்கத்தில் வெளியான ராயன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) நடித்திருந்த சொர்க்கவாசல் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
46
சர்ச்சையில் சிக்காத செல்வராகவன்
தனுஷ் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், அவருடைய அண்ணன் செல்வராகவன் பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத மனிதர். இவர் முன்னாள் மனைவி சோனியா அகர்வாலை விவாகரத்து செய்ய காரணம் கூட, அந்த நடிகையின் குடிப்பழக்கம் என்றே கூறப்பட்டது. ஆனால் இரண்டாவதாக தன்னுடைய துணை இயக்குனர் கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டு, 3 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய மனதில் எழும் கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ள இவர், தற்போது வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தீர்க்க தரிசியாகவே மாறிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, "ஒரு விஷயம் பண்ண போறீங்க, உங்க லட்சியத்தை அடைவதற்கான பிரிப்பரேஷனில் இறங்குறீங்க அப்படினா அது ரொம்ப நல்லது. அதை ஏன் ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சுக்கிட்டு திரியணும். ஏய் நான் என்ன பண்ண போறேன் தெரியுமா? என நீங்கள் செய்ய வரும் விஷயத்தை உங்களுடைய பிரெண்ட்ஸ் உள்ளிட்ட பலரிடம் அதை சொல்லி சொன்னால் என்ன ஆகும், அந்த காரியம் விளங்காமலே போயிடும். நீங்க சொல்லி அவங்க சந்தோச படுவாங்கனு நினைக்கிறீங்களா? இந்த உலகத்துல யாரும் எதற்காகவும், மத்தவங்களுக்காக சந்தோஷப்படுறதே இல்லை.
66
யார் கிட்டையும் போய் உதவி கேட்காதீங்க:
அமைதியா இருங்க, அமைதியா வேலை செய்யுங்க, அமைதியா போங்க, அமைதியா வாங்க. நீங்க வேலை செய்யறது யாருக்குமே தெரியக்கூடாது. உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு கூட தெரியக்கூடாது. இதே போல இன்னொரு விஷயம் எதுக்காகவும் யாருகிட்டயும் போயி உதவி கேட்காதீங்க. நீங்க சின்ன உதவி கேட்கலாம் அவங்களும் பண்ணிடறாங்கன்னு வச்சுக்கோங்க, அதை அவங்க ஆயுசு முழுக்க சொல்லி சொல்லி காட்டுவாங்க. மத்தவங்க கிட்ட நான் அவனுக்கு இந்த உதவி செஞ்சிருக்கேன் தெரியுமா? என்று ஒன்றையனா உதவி செஞ்சுட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க. என்று பேஇசியுள்ளார். இதை கேட்ட நெட்டிசன்கள் பலர், எப்படி இவ்வளவு சரியா தீர்க்க தரிசி மாதிரி சொல்றீங்க அப்படினு கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.