நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் தன்னுடைய மனைவி அபிராமியை பங்குதாரர்களாக வைத்து ஈசன் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்நிறுவனம் மூலம் ஜக ஜால கில்லாடி என்கிற படத்தை தயாரித்து. அப்படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்தனர்.
இப்படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த கடனை 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக துஷ்யந்த் மற்றும் அவர் மனைவி அபிராமி இருவரும் உறுதி அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்
இதையும் படியுங்கள்... தேசிய விருது அறிவிக்கப்பட்டும் வாங்க மறுத்த சிவாஜி கணேசன் - காரணம் என்ன?