ஆஸ்கார் விருது சிலையின் விலை எவ்வளவு? ஏன் விற்க முடியாது?

Published : Mar 03, 2025, 11:29 AM IST

Oscar Award Statue Cost : ஆஸ்கார் சிலை வடிவமைப்பு, அதனுடைய விலை, தங்கமா உள்ளிட்ட ஆஸ்கார் குறித்த சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.

PREV
15
ஆஸ்கார் விருது சிலையின் விலை எவ்வளவு? ஏன் விற்க முடியாது?

Oscar Award Statue Cost : மதிப்புமிக்க விருதுகளில் ஒன்று ஆஸ்கார். பொழுதுபோக்கு துறையில் சிறந்த நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தொழ்ல்நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வரப்படுகிறது. ஆஸ்கார் விருதை கையில் ஏந்தியபடி நின்று போஸ்கொடுப்பது தான் ஒவ்வொருவரது லட்சியமாக்வே பார்க்கப்படுகிறது.

25
Oscar Award Statue Value and Cost Check All Details Here

ஆஸ்கார் சிலையின் உயரம் மட்டும் 13.5 இன்ச் (34.3 செமீ). இதனுடைய எடை 3.866 கிலோ. முதல் முறையாக 1928 ஆம் ஆண்டு தான் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்ஸர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அமைப்பு தான் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருது வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் இந்த அமைப்பில் 36 உறுப்பினர்கள் இருந்த நிலையில் இப்போது கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருக்கின்றனர்.  

35
Oscar Award Statue Value

மெட்ரோ கோல்டன் மேயர் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கலை இயக்குநர் செட்ரிக் கிபான்ச் தான் ஆஸ்கார் விருதை வரைந்தார். அதுவும், வாள் ஏந்திய பெண் நிற்பது போன்ற வடிவததை வரைந்தார். அதற்கு அமெரிக்க சிற்பியான ஜார்ஜ் மேலேண்ட் ஸ்டான்லி தான் முப்பரிமாண வடிவத்தை கொடுத்தார். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், எழுத்தாளர்கள் தான் ஒரு படம் உருவாவதற்கு காரணம். இந்த 5 முக்கிய தூண்களை சுட்டிக் காட்டும் வகையில் தான் ஆஸ்கார் சிலையில் 5 ஸ்போக்குகள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

45
Oscar Award Statue Cost

ஆரம்பகாலகட்டத்தில் ஆஸ்கார் விருதானது வெண்கலத்தால் செய்யப்பட்டு அதற்கு தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. நாளடைவில் வெண்கலம், தாமிரம், தகரம், ஆண்டிமனி ஆகியவற்றின் கலையால் செய்யப்பட்டு அதற்கு தங்க முலாம் பூசப்பட்டது. ஆஸ்கார் விருதின் உண்மையான பெயர் அகாடமி அவார்டு ஆஃப் மெரிட். ஆரம்பகாலம் முதலே ஆஸ்கார் விருது சிலை அழைக்கப்பட்ட நிலையில் அதுவே ஆஸ்கார் விருது என்ற பெயராக நிலைத்து நின்றுவிட்டது.

55
Oscar Award Statue Value

ஆஸ்கார் விருது விலை எவ்வளவு?

ஒவ்வொரு சிலை தயாரிப்பதற்கு மட்டும் அமெரிக்க டாலர் மதிப்பில் 400 டாலர் வரையில் செலவாகும். இந்த சிலையை அகாடமியின் தயாரிப்பு நிற்வனத்தை தவிர வேறு யாரும் தயாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதை பெறும் பிரபலங்கள் அதனை வேறு யாருக்கும் விற்கவும் கூடாது என்பது அகாடமியின் உத்தரவு.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories