சத்யராஜை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மரைக்காயர் இயக்குனர்..

Kanmani P   | Asianet News
Published : Jan 08, 2022, 12:39 PM ISTUpdated : Jan 08, 2022, 12:40 PM IST

சத்யராஜை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  மரைக்காயர் இயக்குனர்.. சினிமா திரையுலகில் தொடரும் கொரோனா பாதிப்புகள்..

PREV
18
சத்யராஜை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  மரைக்காயர் இயக்குனர்..
kamal

கடந்த நவம்பர் 22 -ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய போது அவருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார்.

28
vadivelu

பின்னர் கடந்த மாதம் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடல் உருவாக்கத்திற்காக லண்டன் சென்று திரும்பிய நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர்  சுராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

38
Arun Vijay

 நடிகர் அருண்விஜய் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவித்திருந்தார். தற்போது இவர் தற்போது  ‘ஓ மை டாக்’ மற்றும் ஹரி இயக்கத்தில் யானை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

48
meena

அருண் விஜயை தொடர்ந்து நடிகை மீனா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மீனா குடும்பத்தினருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மீனா தனது குடும்பத்துடன் தனிமை படுத்திக்கொண்டுள்ளார். 

58
thaman

இசையமைப்பாளர் தமனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இவர் ஈஸ்வரன், அரண்மனை 3, எனிமி, ராதே ஷ்யாம் உள்ளிட்ட பல பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்துள்ளார். அதோடு வரவிருக்கும் விஜய் 66 படத்தில் தமன் இசையமைக்க ஒப்பந்தமியுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளான தமன் தற்போது வீட்டு தனிமையில் உள்ளார்.

68
trisha

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது பதிவில், இதுகுறித்து த்ரிஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. எனக்கு அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் விளைவாக எனக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதற்காக நான் நன்றி கூறுகிறேன். விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியிருந்தார்.

78
sathyaraj

சத்யராஜுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியானதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

88
priyadarshan

தற்போது இயக்குனர் பிரியதர்ஷனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் இயக்குனரான பிரியதர்ஷன் கடைசியாக மோகன்லால் நாயனாக நடித்திருந்த வரலாறு சார்ந்த கதைக்களமாக மரைக்காயர் படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories