Beast Update : என்ன நண்பா ரெடியா... நெல்சன் போட்ட ‘பீஸ்ட் அப்டேட்’ டுவிட்- பார்த்ததும் குஷியான விஜய் ரசிகர்கள்

Ganesh A   | Asianet News
Published : Mar 16, 2022, 06:36 PM IST

Beast Update : பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இல்லை என வெளியான செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

PREV
14
Beast Update : என்ன நண்பா ரெடியா... நெல்சன் போட்ட ‘பீஸ்ட் அப்டேட்’ டுவிட்- பார்த்ததும் குஷியான விஜய் ரசிகர்கள்

இன்னும் ஒரு மாதத்தில் ரிலீஸ்

நெல்சன் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ள நிலையில், படக்குழு எந்தவித அப்டேட்டும் வெளியிடாமல் இருந்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

24

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அதுமட்டுமின்றி பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இல்லை என வெளியான செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பீஸ்ட் அப்டேட்டாவது விடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

34

நெல்சனின் டுவிட்

இந்நிலையில், ரசிகர்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க, பீஸ்ட் அப்டேட்டை வெளியிட படக்குழு தயாராகி உள்ளது. இதனை உறுது செய்யும் விதமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள நெல்சன்.  ‘பீஸ்ட் அப்டேட் வந்துகொண்டிருக்கிறது’ என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

44

என்ன அப்டேட்..?

அநேகமாக இது பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஆகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படத்தின் சிறப்பு போஸ்டருடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்படத்தை ஏப்ரல் 13-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அப்போ அந்த அறிவு இருந்திருக்கனும்... பாத்ரூம் மேட்டரை கூறி சுரேஷ் சக்கரவர்த்தியை வெளுத்துவாங்கிய அனிதா

Read more Photos on
click me!

Recommended Stories