அபராதம் செலுத்தி சிறை தண்டனையில் இருந்து தப்பித்த இயக்குனர் லிங்குசாமி

First Published Aug 24, 2022, 3:06 PM IST

Lingusamy : செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமி மீது குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் திரையுலகில் அஜித், சூர்யா, விஷால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸான இயக்குனராக வலம் வந்தவர் லிங்குசாமி. சமீபத்தில் செக் மோசடி வழக்கில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இயக்குனர் லிங்குசாமி கடந்த 2014-ம் ஆண்டு கார்த்தி மற்றும் சமந்தாவை வைத்து ‘எண்ணி ஏழு நாள்’ என்கிற படத்தை இயக்கவும், தயாரிக்கவும் முடிவு செய்தார். இதற்காக பிவிபி கேப்பிடல்ஸ் என்கிற நிறுவனத்திடம் இருந்து ரூ.1.3 கோடி கடனாக பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாததன் காரணமாக லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மீது பிவிபி கேப்பிடல்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதையும் படியுங்கள்... இரண்டாவது முறையாக பூஜையோடு துவங்கிய 'இந்தியன் 2 ' படப்பிடிப்பு! வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடன் தொகையை திருப்பி செலுத்த உத்தரவிட்டது. இதையடுத்து ரூ.1.3 கோடிக்கான காசோலையை லிங்குசாமி வழங்கி இருக்கிறார். வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் அந்த காசோலை திருப்பி வந்ததையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லிங்குசாமி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்திய லிங்குசாமி சிறை தண்டனையில் இருந்து தப்பித்தார்.

இதையும் படியுங்கள்... ஹிருத்திக் ரோஷன் வேஸ்ட்... விஜய் சேதுபதி தான் பெஸ்ட் - இந்தி ‘விக்ரம் வேதா’ டீசரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

click me!