சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த எச்.வினோத் கடைசியாக இயக்கிய படம் வலிமை. அஜித் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்தது.
வலிமை படத்தை தொடர்ந்து அஜித்துடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள எச்.வினோத், அவர் நடிக்கும் ஏ.கே.61 படத்தை இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
ஏ.கே.61 திரைப்படம் பேங்க் கொள்ளையை மையமாக வைத்து தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைத்து, வெள்ளை நிற தாடியுடன் புது கெட் அப்பிற்கு மாறி உள்ளார். இப்படத்திற்காக சென்னை மவுண்ட் ரோடு செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏ.கே.61 படப்பிடிப்பு தளத்திற்குள் யாரும் செல்போன் கொண்டுவரக் கூடாது என படக்குழுவினருக்கு இயக்குனர் எச்.வினோத் உத்தரவிட்டுள்ளாராம். விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கின் போது சில புகைப்படங்கள் லீக் ஆகின. அவ்வாறு ஏ.கே.61 படத்தின் புகைப்படங்கள் லீக் ஆகிவிடக் கூடாது என்ற காரணத்தால் இயக்குனர் எச்.வினோத் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
இதையும் படியுங்கள்... KGF 2 : ரஜினியை ஓரங்கட்டிய யாஷ்... 2.0 பட சாதனையை அசால்டாக தட்டித்தூக்கியது கே.ஜி.எஃப் 2