Beast Box Office: தமிழக பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய பீஸ்ட் ...5 -வது நாள் முடிவிலும் இவ்வளவு குறைவான வசூலா?

Published : Apr 18, 2022, 09:32 AM IST

Beast Box Office: கே.ஜி.எஃப் 2 படத்தின் வருகை மற்றும் கடும் விமர்சனங்கள் காரணமாக 5 -வது நாள் முடிவிலும் பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் கடும் சரிவை சந்தித்துள்ளது. 

PREV
18
Beast Box Office: தமிழக பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய பீஸ்ட் ...5 -வது நாள் முடிவிலும் இவ்வளவு குறைவான வசூலா?
beast

தளபதி விஜய்யின் 65வது படமான பீஸ்ட் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

28
beast

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

38
beast

ரிலீசுக்கு முன்பே பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது. இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் சில இடங்களில் குறைவாக இருந்தாலும், பல இடங்களில் அதிக விலைக்கு விற்பட்டது. ஒருபுறம், விஜய் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டை கட்அவுட், பாலாபிஷேகம் என திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தனர். 

48
beast

மேலும், வித்தியாசமான விஜய்யை இந்தப்படத்தில் பார்க்கலாம் என்றும், காமெடியில் கலந்து கட்டி அடிக்கும் நெல்சன், தற்போது ஆக்ஷனில் பின்னி பிடலெடுத்துள்ளதாக ஆர்வமாக காத்திருந்தனர்.

58
beast

இருப்பினும், எதிர்பார்த்த அளவு படம் இல்லாததால் இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால்,ரசிகர்கள் மிகுந்து வருத்தம் அடைந்துள்ளனர்.  

68
beast

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீஸ்ட் திரைப்படம் மற்ற இடங்களில் முதல் நாள் வசூலில் சொதப்பினாலும் தமிழ் நாட்டில் இதுவரை இருந்த சாதனைகளையும் முறியடித்து நம்பர் 1 திரைப்படமாக மாறியுள்ளது. 

78
beast

கே.ஜி.எஃப் 2 படத்தின் வருகை, விமர்சனங்கள் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் கடும் சரிவை சந்தித்துள்ளது. இப்படம் இரண்டாம் நாளில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் 20.95 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது முதல் நாளோடு ஒப்பிடுகையில் 57 சதவீதம் குறைவாகும்.  மேலும், மூன்றாவது நாளில் ரூ.15 கோடி வசூல் செய்திருந்தது.
 

88
beast

இந்நிலையில், தொடர்ந்து அதன் வசூல் விவரம் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன் படி, பீஸ்ட் படத்தின் 5 நாள் தமிழக வசூல் விவரம் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் படம் ரூ. 85 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பல இடங்களில் பீஸ்ட் படத்திற்கு பதிலாக யஷ் நடித்துள்ள KGF 2 படத்தை திரையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories