துணிவு படத்தில் அஜித் ஹீரோவா? வில்லனா? - இயக்குனர் எச்.வினோத் ஓபன் டாக்

First Published | Dec 4, 2022, 10:50 AM IST

துணிவு படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் தற்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் துணிவு. போனிகபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் அஜித் உடன் மஞ்சு வாரியர், பாவனி, அமீர், சமுத்திரக்கனி, சிபி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், துணிவு படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

Tap to resize

துணிவு எப்படிப்பட்ட படமாக இருக்கும்?

அதில் அவர் கூறியதாவது : “வலிமை படம் ரிலீசாகும் முன்பே துணிவு படம் பண்ணுவது உறுதியாகிவிட்டது. இப்படத்தை நான் சின்ன பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டு இருந்தேன். அஜித் சார் கதை கேட்டதும் நான் இதில் நடிக்க விரும்புகிறேன் என சொன்னார். அதன்பின் தான் இது பெரிய பட்ஜெட் படமாக மாறியது. இது முழுக்க முழுக்க பணத்தை பற்றிய படமாக இருக்கும். சுருக்கமா சொல்லனும்னா அயோக்கியர்களின் ஆட்டம் தான் இந்த துணிவு.

இதையும் படியுங்கள்... செம்ம கியூட்... முதல் முறையாக ரசிகர்களுக்கு மகளை கட்டிய சாயிஷா! வைரலாகும் வீடியோ.!

அஜித் ஹீரோவா? வில்லனா?

துணிவு படத்தில் அஜித் வில்லனாக நடித்துள்ளதாக தகவல் பரவியது குறித்து பதிலளித்துள்ள இயக்குனர் எச்.வினோத், அஜித் வில்லனா நடிச்சிருக்காருனு நான் சொன்னா உடனே மங்காத்தா மாதிரியானு கேட்பாங்க. இந்த மாதிரி அவங்க சொந்த கற்பனைய கொட்றது தான் பிரச்சனையே. ஆனால் நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், ஆடியன்ஸ் விரும்புற எல்லாமே படத்துல இருக்கும். 

அஜித்துக்கு ஜோடி இல்லையா?

துணிவு படத்தின் கதைப்படி ஹீரோவுக்கு ஜோடி வேண்டாம் என முடிவு செய்துவிட்டோம். மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடி இல்லை. மஞ்சு வாரியர், அமீர், பாவனி, சிபி இவர்களெல்லாம் அஜித்தின் டீம் அவ்வளவுதான். இந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாக இருக்கும். அஜித்தின் வயசுக்கு நிகரான ஒரு பெண் கதாபாத்திரம் படத்தில் இருந்தால் நல்லா இருக்கும் என்பதற்காக மஞ்சு வாரியரை தேர்ந்தெடுத்தோம். 

இதையும் படியுங்கள்... காதலனை கட்டிப்பிடித்து முத்தமிட்டு.. கடற்கரை பக்கத்தில் புது வீடு வாங்கிய தகவலை பகிர்ந்த பிரியா பவானி ஷங்கர்!

Latest Videos

click me!