இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலா. இவர் கடந்த 1999-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு பொக்கிஷ்மாக கொண்டாடப்பட்டாலும், இது ரிலீஸ் ஆகும் முன் பல சிக்கல்களை சந்தித்தது. இப்படத்தை கிட்டத்தட்ட 60 வினியோகஸ்தர்களுக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இதன் கிளைமாக்ஸ் காரணமாக இப்படத்தை யாரும் வெளியிட முன்வரவில்லையாம். அதன்பின்னர் எந்தவித புரமோஷனும் இன்றி இப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆனால் போகப்போக படம் பார்த்த மக்கள் படத்தை பற்றி பேசத் தொடங்கியதும் படமும் பிக் அப் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. நடிகர் விக்ரமின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமும் சேது தான்.
24
இயக்குனர் பாலாவின் திரைப்பயணம்
இதையடுத்து சூர்யா உடன் கூட்டணி அமைத்த பாலா அவரை வைத்து நந்தா என்கிற படத்தை இயக்கினார். இப்படத்திற்கு முன்னர் வரை சூர்யாவிற்கு நடிக்கவே வராது என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தது. அவரை ஒரு தரமான நடிகராக உயர்த்திய படம் நந்தா. பின்னர் விக்ரம், சூர்யா இருவரை வைத்து பிதாமகன் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்தார் பாலா. இப்படத்திற்காக நடிகர் விக்ரமுக்கு தேசிய விருதும் கிடைத்தது. பின்னர் ஆர்யாவை வைத்து நான் கடவுள், படத்தை இயக்கினார் பாலா. அப்படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது. அதன்பின் பரதேசி, அவன் இவன், நாச்சியார், தாரை தப்பட்டை என பாலா இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவின.
34
கம்பேக் கொடுக்க காத்திருக்கும் பாலா?
2018-ம் ஆண்டுக்கு பின்னர் 7 ஆண்டுகள் அவர் இயக்கத்தில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. அதன்பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் இயக்கிய வணங்கான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் முதலில் சூர்யா தான் ஹீரோவாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் அவர் விலகியதை அடுத்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை எடுத்து முடித்தார் பாலா. இது அவரின் கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் அட்டர் பிளாப் ஆனது. வணங்கான் தோல்விக்கு பின்னர் தன்னுடைய அடுத்த படத்தை புதுமுக நடிகரை வைத்து இயக்க உள்ளாராம் பாலா. அப்படத்தை டிவிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் பாலா இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் பாலா ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அதுமட்டுமின்றி அவரின் சொத்து மதிப்பு ரூ.80 முதல் ரூ.85 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இயக்குனர் பாலாவுக்கு திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. அவர் கடந்த 2004-ம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.