பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலா (Bala). பின்னர் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான விக்ரமின் சேது (Sethu) படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர் அடுத்தடுத்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி என தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இவரது படங்கள் இதுவரை 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 பிலிம்பேர் விருதுகள் மற்றும் 14 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விக்ரம் (Vikram), சூர்யா, விஷால், ஆர்யா (Arya) போன்ற நடிகர்கள் இவர் படங்களில் நடித்ததன் மூலம் தான் புகழ் வெளிச்சம் பெற்றனர். இவர் படம் இயக்குவது மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார்.
அந்த வகையில் சூர்யாவின் மாயாவி, மிஷ்கினின் பிசாசு (Pisasu), அதர்வா நடித்த சண்டி வீரன் போன்ற படங்களை தயாரித்துள்ள பாலா, தற்போது ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் (Visithiran) படத்தை தயாரித்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஜேசப் என்கிற படத்தின் ரீமேக்காக உருவாகி உள்ள இப்படம் வருகிற மே மாதம் திரைக்கு வர உள்ளது.
இதுதவிர நடிகர் சூர்யா (Suriya) நடிக்கும் படத்தையும் இயக்கி வருகிறார் பாலா. இவ்வாறு தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பிசியாக இயங்கி வரும் பாலா, தற்போது தனது மனைவி முத்துமலரை (MuthuMalar) விவாகரத்து பெற்று பிரிந்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் பாலா (Director Bala) கடந்த 2004-ம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்போது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதன்மூலம் இவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.