கொரோனாவுக்கு பலியான மனைவி.. கண்ணீருடன் காதல் பகிர்ந்த இயக்குனர்

Kanmani P   | Asianet News
Published : May 16, 2022, 01:22 PM IST

‘நெஞ்சுக்கு நீதி' இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கடந்தாண்டுகொரோனாவால் உயிரிழந்த தனது மனைவிக்காக ட்விட்டரில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

PREV
15
கொரோனாவுக்கு பலியான மனைவி.. கண்ணீருடன் காதல் பகிர்ந்த இயக்குனர்
Arunraja Kamaraj

சிவகார்த்திகேயனின் நண்பன் : 

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பல்வேறு பரிமாணத்தில் தோன்றி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் அருண்ராஜா காமராஜ்.. இவர் சிவகார்த்திகேயனின் கல்லூரிக்கால நண்பர். கடந்த 2018-ம் ஆண்டும் சிவகார்த்திகேயேன் பேனரில் கனா படத்தை இயக்கியிருந்தார். முன்னதாக நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குநராக கோலமாவு கோகிலா படத்தில் பணிபுரிந்திருந்தார். இவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

25
Vijay

பாடலாசிரியராக அருண்ராஜா காமராஜ் :

ஆரம்பத்தில் பாடலாசிரியராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், பீட்சா படத்தில் ராத்திரி பாடலை எழுதியிருந்த இவர் இதையடுத்து  ஜிகர்தண்டா, காக்கி சட்டை,  தெறி, காலா, கபாலீ , தர்பார் உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களில் பாடல் இயற்றியுள்ளார். இதில் கபாலீ படத்தில் இவர் எழுதி படியிருந்த நெருப்புடா பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

35
arunraja kamaraj

இயக்குனராக அருண்ராஜா :

ராஜா ராணி, மான் கராத்தே, ரெமோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அருண்ராஜா கனா படத்தை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.

 

45
arunraja kamaraj

கொரோனாவால் உயிரிழந்த அருண்ராஜ் காமராஜின் மனைவி :

சினிமாவுலகில் வளரும் இயக்குனராக இருக்கும் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருண்ராஜா காமராஜின் வெற்றிக்கு உறுதுணையாக அவரது மனைவி மறைவிற்கு, சமூக வலைத்தளம் மூலம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். 

55
arunraja kamaraj

மனைவிக்கு அஞ்சலி :

இந்நிலையில் சிந்துஜா மறைந்து இன்றுடன் ஓராண்டாவை ஒட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவியின் மறைவு குறித்து உருக்கமான பதிவிட்டுள்ளார் இயக்குனர். அதில், உடனிரு எப்போதும்  ❤️❤️❤️ உடைந்திடா உண்மையாய் 
உடைத்திடா மென்மையாய் .. 
ஏதேதோ எண்ணங்கள் எனைச்சூழ 
நீயே அரணாய் எனை ஆள.. 
உடனிரு எந்நாளும்  பாப்பி .. என எழுதியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories