Arunraja Kamaraj : மனைவி இறந்த ஒரே வருடத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அருண் ராஜா காமராஜ்!

First Published | Oct 31, 2022, 4:08 PM IST

பிரபல நடிகரும், இயக்குனருமான அருண் ராஜா காமராஜின் முதல் மனைவி சிந்துஜா இறந்து ஒரு வருடமே ஆன நிலையில், இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி', படத்தின் மூலம் ஒரு காமெடி நடிகராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான 'மரகதா நானாயம்', 'நட்புனா என்னானு தெரியுமா', 'மான் கராத்தே', மற்றும் 'கா பெ ரணசிங்கம்' உள்ளிட்ட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிப்பை தொடர்ந்து, 'கபாலி' படத்தில் இடம்பெற்ற நெருப்புடா... நெருங்குடா... பார்ப்போம் பாடல் மூலம், சிறந்த பாடகராகவும், லிரிக்ஸ் ரைட்டராகவும் தடம் பதித்தார். அதே போல் விஜய்க்கு இவர் எழுதிய 'வா வரலாம் வா' பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகள்: Bharath Kalyan Wife death: பிரபல சின்னத்திரை நடிகர் பாரத் கல்யாண் மனைவி அதிர்ச்சி மரணம்..!

Latest Videos


பின்னர் திடீர் என இவர் இயக்குனர் அவதாரம் எடுத்தார். கல்லூரி கால நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த, பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'கனா' படத்தை இயக்கி இருந்தார்.  இந்த படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் காயகியாக நடித்தார். இந்திய அளவில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் படமான 'கனா ' வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் கடந்த வருடம், அருண் ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா... கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்த நிலையில், மெல்ல மெல்ல தன்னுடைய மனைவியின் இழப்பில் இருந்து மீண்டும் பட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் வீட்டில் யார் ஸ்ட்ராங்? யார் வெளியேறுவார்? போட்டியாளர்களுக்குள் நடக்கும் பேச்சு! வெளியான புரோமோ!

மேலும் இவர் இரண்டாவதாக உதயநிதியை வைத்து இயக்கி இருந்த 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கண்டது. அடுத்தடுத்த படங்களின் கதை மற்றும் இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்தார்.

அருண் ராஜா காமராஜின் மனைவி உயிரிழந்து ஒரு வருடமே ஆகும் நிலையில், அக்டோபர் 28 ஆம் தேதி... இவருக்கு இரண்டாம் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இவர் தன்னுடைய திருமணம் குறித்த தகவலை வெளியிடுவார் என கூறப்படுகிறது. அருண் ராஜா காமராஜ் மற்றும் இறந்த அவருடைய மனைவி சிந்துஜாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் பிக்பாஸ் காணாமல் போய்விடும்! நடிகர் மன்சூர் அலிகானின் சூப்பர் பிளான்!

click me!