80'ஸ் இளைஞர்களின் இதயத்தில் கனவு கன்னியாகவும், தமிழ்திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகைநதியா. அன்றும் முதல் இன்று வரை அதே பளபளக்கும் இளமையுடன்வலம் வருகிறார்.
1985ம் ஆண்டு வெளியான “பூவே பூச்சூடவா” படம் மூலம் தமிழ்ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நதியா, உயிரே உனக்காக , நிலவேமலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்டபடங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வலம் வந்தார்.
மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக புகழ்பெற்றவர். மற்ற நடிகைகளை விட வித்தியாசமான நடிப்பைவெளிப்படுத்தியதால் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தைஏற்படுத்தினார்.
1988ம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன நதியா, சினிமாவில்நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நதியா - சிரீஸ் தம்பதிக்கு சனம்,ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா, 2004ம்ஆண்டு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம்ரவிக்கு அம்மாவாக நடித்தார்.அதன் பின்னர் தமிழ், தெலுங்குசினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நதியா, சோசியல்மீடியாவிலும் செம்ம ஆக்டிவாக இருக்கிறார்.
லாக்டவுன் நேரத்தில் தனது ஒர்க் அவுட் மற்றும் குக்கிங்வீடியோக்களை பதிவிட்டு வந்த நதியா. அதன் பின்னர் தினமும்தொடர்ந்து தன்னுடையை பழைய ஷூட்டிங் போட்டோஸ்,குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் போட்டோக்களையும் பதிவிட்டுவருகிறார்.
அப்படி நதியா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள80’ஸ் ஸ்டைல் போட்டோக்கள் சில சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.
இப்போது தான் நடிகைகள் எல்லாரும் இன்ஸ்டாகிராமில்விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியில் ஆளைமயக்குகின்றனர். ஆனால் 80-களில் துளியும் கவர்ச்சி இன்றி நதியாஅசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அளவுக்கு அதிகமாக மேக்கப்போ, ஆடம்பரமான ஆடை, அணிகலன்களோ இன்றி சுடிதார், புடவையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
அதுவும் நெற்றில் வட்ட வடிவில் நதியா வைத்துள்ள அம்சமானபொட்டிற்காகவே இந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில்வைரலாகி வருகிறது.
புடவையில் விளக்கேற்றும் அழகு தேவதையாய் ஜொலிக்கும் நதியா