ரன்வீர் சிங் நாயகனாக நடித்துள்ள துரந்தர் திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை அமோக வசூலை பெற்று அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'துரந்தர்'. ஆதித்ய தர் இயக்கிய இந்த மாஸ் ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக சில காட்சிகள் நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. படத்தின் நீளம் மூன்று மணி 34 நிமிடங்கள். இதன் பட்ஜெட் 280 கோடி ரூபாய்.
24
வசூல் சாதனை படைக்கும் துரந்தர்
ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பை பெற்று வரும் துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மூன்றாவது வாரமும் வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி 17 நாட்கள் ஆகும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்திய பாக்ஸ் ஆபிஸில் மட்டும் 38.5 கோடி ரூபாய் வசூலித்தது. உலக பாக்ஸ் ஆபிஸில் மொத்தமாக 852.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் இருந்து மட்டும் துரந்தர் 566.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் மூலம், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல்' படத்தின் வாழ்நாள் வசூலை துரந்தர் முறியடித்துள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் அனிமல் படத்தின் வாழ்நாள் வசூல் 553 கோடி ரூபாயாக இருந்தது.
34
அவதார் 3-ஐ விட அதிக வசூல் அள்ளிய துரந்தர்
அண்மையில் வெளியான ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 3 திரைப்படத்தையும் பாக்ஸ் ஆபிஸில் பின்னுக்கு தள்ளி இருக்கிறது துரந்தர். ஞாயிற்றுக்கிழமை அவதார் 3 திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.25 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. ஆனால் துரந்தர் திரைப்படம் அதைவிட கூடுதலாக 13 கோடி வசூலித்து அவதார் 3 படத்தை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய படமாக காந்தாரா சாப்டர் 1 இருக்கும் நிலையில், அதன் சாதனையையும் துரந்தர் திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் ஆதித்ய தர். ஆதித்ய தர் எழுதி இயக்கிய "துரந்தர்" திரைப்படத்தை அவரும், ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். B62 ஸ்டுடியோஸ் தயாரித்து, ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் 'துரந்தர்', அடையாளம் தெரியாத மனிதர்களின் தோற்றம் குறித்த சொல்லப்படாத கதையை வெளிப்படுத்துகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய இந்தித் திரைப்படமாக "துரந்தர்" திரையரங்குகளில் வெளியானது. ஒளிப்பதிவு - விகாஷ் நவ்லாகா, எடிட்டர் - சிவகுமார் வி பணிக்கர், இசை - சஷ்வத் சச்தேவ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.