கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?

Published : Dec 22, 2025, 03:05 PM IST

விக்ரம் பிரபு நடித்த சிறை முதல், கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா வரை டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை அன்று தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

PREV
17
Theatre and OTT Release For Christmas 2025

2025-ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மேலும் சிறப்பாக்க, பல சிறந்த திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு வரவிருக்கின்றன. விக்ரம் பிரபு, மோகன்லால், நிவின் பாலி, கிச்சா சுதீப், அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் படங்கள் டிசம்பர் 25 அன்று திரைக்கு வருகின்றன. இதுமட்டுமின்றி, ஓடிடியிலும் ஏராளமான படங்கள் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகின்றன. அவற்றின் தொகுப்பை இங்கே காணலாம்.

சிறை

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் சிறை. இப்படத்தில் விக்ரம் பிரபு உடன் அக்‌ஷய் குமாரும் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 25-ந் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

27
ரெட்ட தல

கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம் ரெட்ட தல. இப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக தன்யா மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து உள்ளார். இப்படமும் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 25-ந் தேதி திரைக்கு வருகிறது.

37
மலையாள படங்கள்

மோகன்லாலின் ‘விருஷபா’

கிறிஸ்துமஸ் வெளியீடுகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விருஷபா. மோகன்லாலின் இந்த பான்-இந்திய திரைப்படத்தை கன்னட இயக்குனர் நந்தகிஷோர் இயக்கியுள்ளார். அவரே இப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். தந்தை-மகன் உறவின் பின்னணியில் ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகளை கலந்து சொல்லும் கதைதான் விருஷபா. இப்படத்தில் மோகன்லால் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் வருகிறார். சமர்ஜித் லங்கேஷ், நயன் சாரிகா, ராகினி த்விவேதி, அஜய், நேஹா சக்சேனா ஆகியோர் இப்படத்தின் மற்ற முக்கிய நட்சத்திரங்கள். ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் விருஷபாவை கேரளாவில் வெளியிடுகிறது.

நிவின் பாலியின் ‘சர்வம் மாயா’

கிறிஸ்துமஸ் வெளியீடுகளில் அதிக கவனம் ஈர்த்துள்ள படம் சர்வம் மாயா. நிவின் பாலி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அஜு வர்கீஸும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இருவரும் இணையும் பத்தாவது படம் இது. அகில் சத்யன் இயக்கும் இப்படம் ஒரு பேண்டஸி ஹாரர் காமெடி வகையைச் சேர்ந்தது. நிவின் பாலியின் இயல்பான நகைச்சுவையை ரசிகர்கள் பெரிதும் விரும்புவதால், இந்தப் படத்தின் மூலம் அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவார் என சினிமா பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

47
மார்க்

கிச்சா சுதீப் நாயகனாக நடிக்கும் 'மார்க்' என்ற கன்னட த்ரில்லர் படமும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை விஜய் கார்த்திகேயன் இயக்கி உள்ளார். இப்படமும் டிசம்பர் 25-ல் ரிலீஸ் ஆகிறது.

57
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்

அமேடியஸ்

பீட்டர் ஷாஃபரின் டோனி விருது வென்ற நாடகத்தின் தழுவலான இந்த வரலாற்று டிராமா, ஐந்து எபிசோடுகளாக வருகிறது. 18ஆம் நூற்றாண்டில் வியன்னாவிற்கு வந்த இளம் இசையமைப்பாளர் வோல்ஃப்காங் அமேடியஸ் மொசார்ட்டின் வாழ்க்கையை இது காட்டுகிறது. இது டிசம்பர் 22 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

கோபன்ஹேகன் டெஸ்ட்

இது ஒரு ஸ்பை த்ரில்லர். உளவுத்துறை ஆய்வாளர் அலெக்சாண்டர் ஹேலின் மூளையை யாரோ ஹேக் செய்து, அவரது ஒவ்வொரு யோசனையையும் கடத்துவதை அவர் கண்டுபிடிப்பதே கதை. இதை டிசம்பர் 28 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.

ஹேப்பி அண்ட் யூ நோ இட்

குழந்தைகளின் இசைத் துறையை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப்படம், 'பேபி ஷார்க்' போன்ற பாடல்கள் உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தை விளக்குகிறது. இப்படம் டிசம்பர் 26 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

நாகினி 7

ஏக்தா கபூரின் சூப்பர்நேச்சுரல் தொடரின் ஏழாவது பாகம் இது. நாகமணியைப் பாதுகாக்கும் நாகினியின் கதை. இதுவும் டிசம்பர் 27 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடிக்கு வர உள்ளது.

நோபடி 2

ஹட்ச் மான்செல் மீண்டும் ஆபத்தான பணிகளில் ஈடுபடும் ஆக்‌ஷன் த்ரில்லர். குடும்பத்துடன் விடுமுறைக்குச் சென்றாலும், மாஃபியா கும்பல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் டிசம்பர் 22 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

67
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி வெளியீடுகள்

ஆந்திரா கிங் தாலுகா

ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகரான சாகரின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள இந்த தெலுங்கு டிராமா, ஹீரோவின் 100வது பட நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் பயணத்தைக் காட்டுகிறது. இப்படம் டிசம்பர் 25 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.

கவர் அப்

புலிட்சர் பரிசு பெற்ற பத்திரிகையாளர் செய்மோர் ஹெர்ஷின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ஆவணப்படம் இது. இதனை டிசம்பர் 25-ந் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

குட்பை ஜூன்

கிறிஸ்துமஸ் பின்னணியில் அமைந்த குடும்ப டிராமா. மருத்துவமனையில் இருக்கும் தாயின் கடைசி நாட்களில் குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சிகளே கதை. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் டிசம்பர் 24, கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீஸ் ஆகிறது.

ஐடல் ஐ

கொரியன் சட்ட மர்ம காதல் தொடர். ஒரு கிரிமினல் வழக்கறிஞர் மற்றும் அவர் விரும்பும் ஐடல் ஒரு கொலை வழக்கில் சிக்குவதே கதை. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் டிசம்பர் 22 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

ரிவால்வர் ரீட்டா

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தமிழ் டார்க் காமெடி த்ரில்லர் படம் தான் ரிவால்வர் ரீட்டா. எதிர்பாராத ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றுகிறது. அதை கீர்த்தி சுரேஷ் எப்படி எதிர்கொண்டார் என்பதே படத்தின் கதை. இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் டிசம்பர் 26 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 வால்யூம் 2

ஹாக்கின்ஸ் நகரத்தின் யதார்த்தத்தையே மாற்றும் இறுதி அத்தியாயங்கள் இந்த வால்யூமில் காட்டப்படும். இந்த வெப் தொடர் டிசம்பர் 26 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

77
ஜீ5

ஏக் தீவானே கி தீவானியத்

ஆபத்தான காதல் மற்றும் அரசியல் சக்தியின் பின்னணியில் அமைந்த ஒரு ரொமாண்டிக் த்ரில்லர். ஜீ 5 ஓடிடி தளத்தில் வருகிற டிசம்பர் 26ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

மிடில் கிளாஸ்

சென்னையில் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஒரு குடும்பம், எதிர்பாராத ஒரு காசோலையால் எதிர்கொள்ளும் சம்பவங்களே கதை. முனீஸ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் உருவான இந்த படம் டிசம்பர் 24 முதல் ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது.

ரொங்கினி பவன்

புதிதாகத் திருமணமான தம்பதியினர் குடியேறும் ஒரு பழைய கட்டிடத்தில் மறைந்திருக்கும் திகில் ரகசியங்களை அடிப்படையாகக் கொண்ட பெங்காலி தொடர். ஜீ 5 ஓடிடியில் டிசம்பர் 25, முதல் வெளியாகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories