ரன்வீர் சிங்கின் 'துரந்தர்: தி ரிவென்ஜ்' படம் முதல் நாளே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியுள்ளது. ஆனாலும், இந்திய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் வரமுடியவில்லை.
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்: தி ரிவென்ஜ்' திரைப்படம் முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 100.23 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதில், இந்தி வெர்ஷன் மட்டும் 96.78 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மீதமுள்ள 3.48 கோடி ரூபாய் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இருந்து கிடைத்துள்ளது. இதுதவிர இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் மூலம் 43 கோடி வசூல் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டும் ரூ.143 கோடி வசூலித்துள்ளது. இது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் லைஃப் டைம் வசூலைவிட அதிகமாகும்.
'துரந்தர்: தி ரிவென்ஜ்' ஒரு ஸ்பை ஆக்ஷன் படமாக முதல் நாளில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தாலும், இந்தியாவின் டாப் 3 ஓப்பனிங் படங்களின் பட்டியலில் இடம் பிடிக்கத் தவறிவிட்டது. இந்தப் பட்டியலில் படம் நான்காவது இடத்தில் உள்ளது. வாங்க, இந்தியாவின் டாப் 3 ஓப்பனிங் படங்களைப் பார்ப்போம்.
24
புஷ்பா 2 சாதனையை நெருங்காத துரந்தர் 2
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா 2: தி ரூல்' தெலுங்குப் படம்தான், இதுவரை இந்தியாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்த படம். சுகுமார் இயக்கிய இந்த ஆக்ஷன் த்ரில்லர், முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 164 கோடி ரூபாய் வசூலித்தது. 'துரந்தர்' படத்தின் பெய்டு ப்ரிவியூ வசூலான 43 கோடியைச் சேர்த்தாலும், 'புஷ்பா 2' வசூலை நெருங்க முடியாது. 'புஷ்பா 2' படத்தின் மொத்த வசூல், இந்தியாவில் 1,234 கோடியும், உலகளவில் 1,742 கோடியும் ஆகும்.
34
டாப் 5 படங்கள்
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்ட பீரியட் ஆக்ஷன் படமான 'RRR', முதல் நாளில் சுமார் 133 கோடி ரூபாய் வசூல் செய்தது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த இந்த பான்-இந்தியா தெலுங்குப் படம், இந்தியாவில் வாழ்நாள் வசூலாக 782 கோடியும், உலகளவில் 1230 கோடியும் வசூலித்தது. இது ஒரு பான்-இந்தியா கன்னடப் படம். இதில் ராக்கிங் ஸ்டார் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் முதல் நாளில் நாடு முழுவதும் 116 கோடி ரூபாய் வசூல் செய்தது. பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படம், இந்தியாவில் 860 கோடியும், உலகளவில் 1,215 கோடியும் வசூலித்தது.
இந்தியாவின் டாப் 5 ஓப்பனிங் படங்களின் பட்டியலில் 5-வது இடத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் நடித்த 'கல்கி 2898 AD' உள்ளது. நாக் அஸ்வின் இயக்கிய இந்தப் படம், முதல் நாளில் இந்தியாவில் 95 கோடி ரூபாய் வசூலித்தது. படத்தின் மொத்த வசூல் இந்தியாவில் 646 கோடியாகவும், உலகளவில் சுமார் 1,042 கோடியாகவும் இருந்தது. துரந்தர் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆனபோது முதல் நாளில் ரூ.28 கோடி வசூலித்து இருந்தது. அதைக்காட்டிலும் துரந்தர் 2 திரைப்படம் கிட்டத்தட்ட 4 மடங்கு அதிக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.